Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காசு பணம் துட்டு மணி மணி".. மீன ராசிக்கு தொழில், வேலையில் நடக்கும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது மீன ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

யோகம்

பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

chithirai-month-zodiac-sign-what-kind-of-benefits-will-get-meenam-pisces-rasi-people-during-this

பெயர்ச்சி

இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.

இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மீன ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ராசியபதியாக இருக்கக்கூடிய குரு பகவான் 3 ஆம் இடத்திலும், சனி பகவான் ராசியிலும் அமர்ந்திருக்கிறார். சுக்கிர பகவான், ராகுவும் அமர்ந்துள்ளது. ஏழரை சனியில் தற்போது ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது. ராசிநாதனும், சுக்கிரனும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பது நல்ல அமைப்பாக இருந்தாலும், ஜென்ம சனியும், ஜென்ம ராகுவும் இருப்பதால் புதிய விஷயங்களை செய்யும்போது யோசித்து செயல்படுவது நல்லது.

எந்தவொரு விஷயமானாலும் ஆக்ரோஷத்துடனும், கோபத்துடனும் இருப்பீர்கள். விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் பேச்சில் அதிகாரம், கடினமாக இருப்பீர்கள். அனுசரனையாகப் பேசுவது, நடந்து கொள்வது நல்லது. முயற்சி ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பயணத்தால் நல்ல அனுகூலம் உண்டாகும்.

மீன ராசிக்காரர்கள் தங்களது சொந்த ஊரை விட்டு செல்லும் அமைப்பு உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்லும், பயணம் மேற்கொள்ளும் அமைப்பு உண்டாகும். வெளிநாட்டில் வேலை தேடும், வேலைக்குச் செல்லும் எண்ணம் ஏற்படும். குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சந்திரன் மேல் சனி உட்கார்ந்திருப்பதால் குழந்தைகளிடம் பிடிவாதம், மந்த தன்மை காணப்படும். அவர்களிடம் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில், வேலை, வியாபாரத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் அதனை கையாளுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது, அனுசரனையாகச் செல்வது மிகவும் முக்கியம். திருமணத்திற்கான யோகம் கைகூடி வரும். கேது அடுத்த மாதம் பெயர்ச்சியாகிறது. சுப காரியங்கள் நடக்கக்கூடிய தன்மை உண்டாகும்.

சுக்கிரன் உங்கள் ராசியில் அமர்ந்திருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். திடீரென வேலை மாறுதல், பதவி உயர்வு ஏற்படும். வேலையில் சிறிய அழுத்தங்கள் ஏற்படும். சித்திரை 31 ஆம் தேதி 10ஆம் இடத்தை ராசியதிபதி பார்ப்பதால் நிறைய மாற்றங்கள் உண்டாகும். கோபப்பட்டு மாற்றங்களைச் செய்வதை தவிர்ப்பது நல்லது.

இரண்டரை வருடங்களுக்கு கடன் கொடுக்காமல் இருப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவது, கூட்டுத் தொழிலில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வேலையில் திருப்தி இருக்காது. மனதளவில் சில பாதிப்புகளை உண்டாக்கும். சந்திரனோடு குரு இணைந்திருப்பதால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. சூரியன், சுக்கிரனுடைய புத்தி நடப்பதால் மனதளவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.வம்பு வழக்கு கோர்ட்டு விஷயங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது. வழக்கமாக செய்யும் எந்தவொரு பணிகளிலும் பாதிப்பு ஏற்படாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+