CM Vijay-க்கு அரசியலில் ஆபத்தா?.. கவனமாக இருக்க வேண்டிய காலம்.. ஜோதிடம் சொல்வது என்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். விஜயின் ஆட்சி நீடிக்காது, மக்களிடம் அவர் மேலான நம்பிக்கை குறைந்து வருகிறது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், முதல்வர் விஜய்க்கு ஆபத்து ஏற்படுமா, கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், அதே நேரத்தில் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அரசியல் அனுபவம், நிர்வாக திறன், கட்சியின் நிலைத்தன்மை போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஜோதிட ரீதியாக விஜயின் தற்போதைய கிரக நிலைகள் என்ன சொல்கின்றன, அவர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டங்கள் எவை, அரசியல் வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் உருவாகுமா என்பதைக் குறித்து பலரும் ஆர்வமாக பேச தொடங்கியுள்ளனர். அந்த வகையில், முதல்வர் விஜயின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய முக்கிய மாற்றங்கள் குறித்து ஜோதிட பார்வையில் இங்கே விரிவாக பார்க்கலாம்.
சூடுபிடிக்கும் அரசியல் களம்
பிரபல ஜோதிடர் ஷெல்வி கூறியதாவது: விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கிடையே போட்டி அதிகமாக இருக்கும். விஜயை எல்லோரும் சாதாரணமாக எடை போடுகின்றனர். அரசியல் களத்தில் விஜயின் குதிரை வேகமெடுக்க ஆரம்பிக்கும். இவருடைய பயணம் ஆரம்பிக்கும்போது நிறைய பேர் காணாமல் போவார்கள் என்று ஏற்கனவே கணித்து கூறியுள்ளேன். அவ்வாறே இப்போதைய அரசியல் களம் அமைந்துள்ளது.
தேர்தல் வரைக்கும் அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி வரை சுக்கிர திசையில் ராகு புத்தி விஜய்க்கு நடந்து கொண்டிருந்தது. இது அவருக்கு விபரீதமான அதிர்ஷ்ட புத்தியாகும். அதனால் தான் அதிகப்படியான 108 தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தவெகவினரே எதிர்பார்க்கவில்லை. தவெகவினர் பலர் தொகுதியில் பிரச்சாரத்திற்கே செல்லவில்லை.
குருப்பெயர்ச்சி
திருக்கணிதத்தின்படி ஜூன் 2 ஆம் தேதியில் இருந்து விஜய்க்கு குரு மாறி ஜென்ம குருவாக வருகிறது. இது சிறு சிறு பிரச்சனைகளைக் கொடுக்கும். 2027 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை எல்லா விஷயங்களையும் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டணிக் கட்சி, கட்சிக்காரர்கள் செய்யும் தவறு போன்றவற்றால் சிறு சிறு தொந்தரவு ஏற்படும்.
விஜயின் ராசி, லக்கினம் கடகம். சனியினுடைய நட்சத்திரம் பூசம். ஏதேனும் குற்றச்சாட்டு, தவறு நடந்தால் விஜயின் நடவடிக்கை அதிரடியாக இருக்கும். விஜய் ஏராளமான திட்டங்களை வைத்திருப்பார். தமிழ்நாட்டோடு விஜய் நிற்கமாட்டார். அகில இந்திய அளவில் கட்சியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மற்றும் விஜயின் கட்சி இருக்காது. தென் இந்தியா, பின்னர நாடு முழுவதும் என விஜய் தொலைநோக்கு பார்வையுடன் இருப்பார்.
விஜய்க்கு ஆபத்தா..
உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் இருவருக்குமே நீசபங்க ராஜயோகம் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் ஆட்சி சந்திரன் நீசம் விஜய்க்கு, உதயநிதிக்கு செவ்வாய் நீசம், சந்திரன் உச்சமாக உள்ளது. குருப்பெயர்ச்சி நடந்த பிறகு ஜூன் மாதம் முதல் அண்ணாமலை வருவதற்கான வாய்ப்புள்ளது. அவருக்கு சூரிய திசை நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த 3 இளைஞர்களுக்கிடையே அதிகளவிலான போட்டி இருக்கும். அதிமுக கட்சி அழிவதற்கான வாய்ப்பு இல்லை
மூன்று பேரின் ஜாதகப்படி இவர்கள் தலைமைக்கு கீழ் மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். விஜய், உதயநிதி, அண்ணாமலையை சுற்றி தான் தமிழக அரசியல் இருக்கும். விஜய் ஆரோக்கியத்தை மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குரு புத்தியும், சனி புத்தியும் இருப்பதால் விஜய் ஆரோக்கியம் மற்றும் வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.
விமானம், ஹெலிகாப்டரை விஜய் அதிகளவில் பயன்படுத்துவது நல்லது. அரசியலைப் பொறுத்தவரை விஜயின் ஜாதகம் ஜெயிக்கும் ஜாதகம். விஜயின் ஆட்சி அதிரடியாக இருக்கும். என்ன சவால்கள் வந்தாலும் அதனை தைரியமாக சமாளிப்பார்.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
மதுரை: அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிய தவெக நிர்வாகி கைது -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு!












Click it and Unblock the Notifications