சனி பெயர்ச்சி பலன் 2023: ஆட்டி வைத்த சனி இனி அதிர்ஷ்டத்தை தரப்போகிறார்.. அனுபவிக்கும் ராசிக்காரர்கள்
சென்னை: சனி பகவான் நீதிமான். ஜீவன காரகன், ஆயுள் காரகன். இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். கும்ப ராசியில் சனிபகவான் தற்போது ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகள் அஷ்டம சனியாக கஷ்டங்களை கொடுத்தவர் இனி பாக்ய சனியாக நிறைய நன்மைகளையும் பலன்களையும் தரப்போகிறார்.
பாக்ய சனி: ராகு கேது பெயர்ச்சி முடிந்த நிலையில் சனி பகவான் வக்ர நிலையில் இருந்து நேர்கதியில் பயணத்தை தொடங்கியுள்ளார். திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வாக்கிய சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இது பாக்ய சனி காலமாகும். மிதுன ராசிக்காரர்களுக்கு நிறைய பாக்கியங்கள் கிடைக்கப்போகிறது.

மிதுனம்: சனி பகவன் உங்கள் ராசிக்கு 8 மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி. ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். இனி ஏழரை ஆண்டுகளுக்கு பொற்காலம்தான். அதெப்படி ஏழரை ஆண்டுகள் என்று கேட்கிறீர்களா? இப்போது சனிப்பெயர்ச்சி ஒன்பதாம் வீட்டில் அமர்கிறார். சனி உங்க யோகாதிபதி. ஒன்பதாம் வீட்டில் அமரும் சனி அடுத்து மீனம் ராசிக்கு நகரும் போது பத்தாம் வீடு, மேஷ ராசிக்கு சனி நகரும் போது லாப ஸ்தானமான 11ஆம் வீடு இப்படி ஏழரை ஆண்டுகாலம் சனி உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார். உங்க கர்மவினைகளும், தசாபுத்திகளும் நல்லதாக இருக்க வேண்டும். அதே போல தசாபுத்திகளும் நன்மை செய்ய வேண்டும்.
தெய்வ அருள்: சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு நகர்ந்து விட்டார். அசிங்கம், அவமானங்கள் முடிவுக்கு வரப்போகிறது. ஒன்பதுக்கு உடைய சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் தொட்டதெல்லாம் வெற்றிதான். பணவரவு அபரிமிதமாக இருக்கும். நேர்மையாக இருப்பீர்கள். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனிபகவானால் பாக்யங்கள் தேடி வரும், தெய்வ கடாட்சம் கிடைக்கும். குல தெய்வ அருளினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வேலை வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு புரமோசனுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். சகல சவுபாங்கியங்களும் கிடைக்கும்.
தைரியம் அதிகரிக்கும்: சனிபகவான் இப்போது மூன்றாம் வீட்டை பார்க்கிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். இளைய சகோதரர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடக்கும் வெற்றிகள் தேடி வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கும், மீடியா துறையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் குவியும்.
வெற்றிகள் தேடி வரும்: சனிபகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டினை பத்தாம் பார்வையாக பார்வையிடுகிறார். நோய்கள் தீரும், வெற்றிகள் தேடி வரும். எதிரிகளின் தொல்லை ஒழியும். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். கணவன் மனைவி இடையே அன்பு பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். திருமணம் தடைபட்டிருந்தவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
பண வருமானம் வரும்: சுப விரைய செலவுகள் ஏற்படும். புதிய சொத்துக்களை வாங்கலாம் சொந்த வீடு கட்டலாம். மாணவர்களுக்கு கல்வி நிலை அற்புதமாக இருக்கும். இதுநாள்வரை கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். பணவருமானம் அதிகரிக்கும் கடன்கள் அடைபடும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறுவீர்கள். வெளிநாடு பயணம் யோகத்தை தரப்போகிறது. ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குழந்தைகள் வழியாக சந்தோஷங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரும்.
சனி பகவான் தரும் சந்தோஷம்: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இனி ஏழரை ஆண்டு காலத்திற்கு சனிபகவான் சந்தோஷத்தையும் அற்புதமான பலன்களையும் தரப்போகிறார். அரசியலில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். பதவிகள் பட்டங்கள் தேடி வரும். அப்பாவின் உடல் நலத்தில் அற்புதங்கள் நடக்கும். வீடு வாசல் சேரும், சொத்து சுகங்கள் வந்து சேரும். தொடர் வெற்றிகள் தேடி வரும். சங்கடங்கள் விலகும் காலம் வந்து விட்டது. சாதனைகள் செய்யப்போகிறீர்கள். அதிர்ஷ்டகரமான சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது. ஒருமுறை திருநாள்ளாறு சனிபகவானை போய் தரிசனம் செய்து தர்பாரண்யேஸ்வரரை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications
