Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2023 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகியுள்ளார். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை என்கின்றனர். மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியாகியிருக்கும் சனிபகவான் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அந்த ராசியில் தங்கி பலாபலன்களை கொடுப்பார். இந்த சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம். அவர்களுக்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். இந்த சனிப்பெயர்ச்சியால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். அதே நேரத்தில் தனுசு, மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், துலாம் ராசிக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறப்போகிறது. மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியும், கடகம் ராசிக்கு கண்டச்சனி காலமும் தொடங்கப்போகிறது.

இந்த சனிப்பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு விரைய சனியாக ஏழரை சனி ஆரம்பிக்கிறது. சனிபகவானால் அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார் சனிபகவான். அவர் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார். இந்த சனிப்பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்றும் பார்க்கலாம்.

 மேஷம் - தொழில் சனி கர்மசனி

மேஷம் - தொழில் சனி கர்மசனி

சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள். காரணம் இந்த சனிபெயர்ச்சியோடு உங்களுக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதி குருவும் இணைந்திருப்பதால் உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகம் தேடி வரப்போகிறது.

 ரிஷபம் - பாக்ய சனி தர்மசனி

ரிஷபம் - பாக்ய சனி தர்மசனி

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் யோகக் காரகன் அஷ்டம சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக படாத பாடு பட்டிருப்பீர்கள். அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குச்சனூர் சனிபகவானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

 மிதுனம் - அஷ்டமத்து சனி

மிதுனம் - அஷ்டமத்து சனி

சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். கஷ்டமில்லாமல் இந்த 30 மாதங்களை மகிழ்ச்சியுடன் கடந்து விடுவீர்கள். வட திருநள்ளாறு என போற்றப்படும் பொழிச்சலூர் சனிபகவானை வணங்குங்கள். பாதிப்புகள் குறையும் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

 கடகம் - கண்டச்சனி

கடகம் - கண்டச்சனி

கடகம் ராசிக்காரர்களே இதுநாள் வரை ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆகா ஓஹோ என்று வாழ வைத்தவர் சனி பகவான். எண்ணற்ற வருமானங்கள், செல்வங்களை கொடுத்து வந்தார். இனி சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நோய்கள் வரலாம் மருத்துவ செலவுகளும் வரும் கவனம் தேவை. சனிபகவானை நீங்கள் எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

 சிம்மம் - ருண ரோக சத்ரு சனி

சிம்மம் - ருண ரோக சத்ரு சனி

சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழுமையான ராஜயோகத்தையும் தரப்போகிறார். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். உங்கள் ராசி அதிபதிக்கு எதிரியாகவே இருந்தாலும் சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்கலாம் தொழில் வளர்ச்சியடைந்து லாபங்கள் கொட்டும். செல்வமும் செல்வாக்கும் கூடும். விநாயகரை சதுர்த்தி நாளில் அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும்.

 கன்னி - புண்ணிய சனி

கன்னி - புண்ணிய சனி

கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள். நல்லது அதிகம் நடக்கும். சனி உங்க ராசிக்கு ஆறுக்கு உடையவர் ஐந்துக்கு உடையவர் என்பதால் வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. திருநள்ளாறு சனிபகவானை வணங்கவும் பாதிப்புகள் நீங்கும்.

 துலாம் - அர்த்தாஷ்டம சனி

துலாம் - அர்த்தாஷ்டம சனி

துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டார். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். சனிக்கிழமை சனி ஓரையில் எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

 விருச்சிகம் - தைரிய சனி

விருச்சிகம் - தைரிய சனி

விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது ராசி. கடந்த ஏழரை ஆண்டுகாலமாக விருச்சிகத்தை ஆட்டி படைத்தது சனி. இனி நன்மைகள் தேடி வரும் காலம்.வராத பணம் தேடி வரும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். ஏழரை ஆண்டுகாலமாக துன்பப்பட்டு சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கொடுத்த கடன்கள் வசூலாகும். பாதிப்புகள் நீங்க சனிபகவானை சரணடையுங்கள். குச்சனூர் சனிபகவானை வணங்குங்கள். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

 தனுசு - குடும்ப சனி

தனுசு - குடும்ப சனி

ஏழரைசனியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கலாம். காரணம் ஜென்ம சனி விலகி பாத சனி ஆரம்பிக்கிறது. ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். வாக்கு குடும்ப சனி என்பதால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும்.

 மகரம் - ஜென்ம சனி

மகரம் - ஜென்ம சனி

மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனி முடிந்து இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள்.

 கும்பம் - விரைய சனி ஏழரை ஆரம்பம்

கும்பம் - விரைய சனி ஏழரை ஆரம்பம்

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. இந்த சனிப்பெயர்ச்சியால் கும்பம் ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. சனி பகவான் உங்க ஆட்சிநாதன். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்கள். சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது. வண்டி வாகனம் வாங்கலாம். வீடு வாங்கலாம். பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதும் சுப செலவுதான்.
சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார். திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

 மீனம் - லாப சனி

மீனம் - லாப சனி

மீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். 11ஆம் வீட்டில் சனி அமர்வதால் செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி தேடி வரும் பல திசைகளில் இருந்தும் பணம் வரும். சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்க நீங்கள் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+