டிசம்பர் மாத ராசி பலன் 2020 - இந்த 4 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும்

டிசம்பர் மாதம் கார்த்திகை மாதம் 15 நாட்களும் மார்கழி மாதம் 15 நாட்களும் இணைந்த மாதம். சூரியன் விருச்சிக ராசியில் 15 நாட்களும் தனுசு ராசியில் 15 நாட்களும் சஞ்சரிப்பார். நவகிரகங்களின் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலனை கொடுக்கும் என்ற

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம். சோதனைகள் நிறைந்த 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் குளுமையான மாதம். மழைக்காலம் முடிவுக்கு வந்து குளிர்காலம் மெல்ல எட்டிப்பார்க்கும். கடுமழை காலமான கார்த்திகை முடிந்து இதமான குளிர் ஆரம்பிக்கும் மார்கழி மாதமும் இணையும் மாதம். இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட மிக முக்கியமான விஷேச தினங்கள் உள்ளன. இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், பார்வை, சேர்க்கையைப் பொருத்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சூரியன் செவ்வாயின் வீடான விருச்சிகத்திலும் குருவின் வீடான தனுசு ராசியிலும் பயணிப்பார். ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் சஞ்சரிக்க புதன் விருச்சிகம், தனுசுவிலும் சஞ்சரிப்பார். சுக்கிரன் இந்த மாத ஆரம்பத்தில் துலாம் ராசியிலும் விருச்சிகம் ராசியிலும் சஞ்சரிக்கிறார்.

சனியும் குருவும் இணைந்து மகரம் ராசியில் பயணிக்கின்றனர். செவ்வாய் மீனம் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மேஷம் ராசியில் ஆட்சி பெற்று அமர்வார். சந்திரன் மாத தொடக்கத்தில் ரிஷபம் ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். வரிசையாக 12 ராசிகளிலும் பயணித்து இறுதியில் டிசம்பர் மாதத்தில் பயணம் செய்கிறார். கிரகங்களின் கூட்டணி பார்வையை பொறுத்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

ராசிநாதன் செவ்வாய் 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலையில் சில பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். 24ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் உங்களுடைய ராசிக்குள் நுழைகிறார். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பத்தாம் வீட்டில் குரு சனியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். தர்மகர்மாதிபதி யோகம் கூடி வந்துள்ளது. வாழ்க்கையில் திருப்பம் நிறைந்த மாதம். சின்னச் சின்ன குழப்பங்கள் இருந்தாலும் குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு கிடைப்பதால் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண பேச்சுகள் வெற்றிகரமாக முடியும். ஏழாம் வீட்டில் உள்ள சுக்கிரன் உங்க ராசியை பார்வையிடுவதால் திருமண சுப யோகங்கள் நடைபெறும். வரன் பார்க்கத் தொடங்கலாம். 11ஆம் தேதி சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி எட்டாம் வீடான விருச்சிகத்திற்கு நகர்கிறார். சூரியன் புதன் இணைந்து எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். டிசம்பர் 15ஆம் தேதிக்கு மேல் ஒன்பதாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகின்றனர். உயர்கல்வி யோகம் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு பார்வையால் உங்களுக்கு பண வரவு நன்றாகவே இருக்கும் என்றாலும் பத்திரப்படுத்துங்கள். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே பேச்சுவார்த்தையில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புத ஆதிபத்ய யோகத்தினால் உயர்கல்வி யோகம் கை கூடி வரும். குருவின் பார்வை நான்காவது வீட்டின் மீது விழுவதால் உயர்கல்வி படிப்பவர்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். மேஷம் ராசிக்கு இந்த மாதத்தில் பணவருமானம் அதிகமாக இருக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். டிசம்பர் மாதத்தை
உற்சாகமாக கடத்துங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

டிசம்பர் மாதம் பிறக்கும் போதே சந்திரன் உங்கள் ராசியில் ராகு உடன் இணைந்திருக்கிறார். ரிஷபம் ராசியின் மீது குருவின் பார்வை கிடைக்கிறது. ஒன்பதுக்கு உடைய சனி ஒன்பதாம் வீட்டில் குரு உடன் இணைந்திருக்கிறார். பாக்கியங்கள் நிறைந்த மாதம். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் திடீர் அதிர்ஷ்டம் வரும். குருவின் பார்வை ராசியில் உள்ள ராகுவின் மீது விழுகிறது. ஒரு புதிய வாய்ப்பு கிடைக்கும். ஏழாம் வீட்டில் புதன் சூரியனுடன் இணைந்து உங்க ராசியை பார்வையிடுவதால் பணத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீடு வாங்கும் யோகம் வரும்.
மாதத்தின் முதல் பாதியில் சூரியன் ஏழாம் வீட்டில் இருக்கிறார். மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். குருவின் பார்வையால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகளை நீக்குவார். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கும். எதையும் தெளிவாக முடிவு செய்வீர்கள். சொத்து வாங்க நல்ல நேரம் கூடி வந்துள்ளது. விபரீத ராஜயோகம் கை கூடி வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். வயிறு பிரச்சினைகள் வரலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் வெற்றிகள் தேடி வரும் மாதம்.

மிதுனம்

மிதுனம்

உங்க ராசி நாதன் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் கேது உடன் இணைந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள குருவும் சனியும் இணைந்து இருப்பதால் சில பாதிப்புகள் வரலாம். குருவின் பார்வை இரண்டாம் வீட்டின் மீது விழுவதால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எட்டுக்கு உடைய சனி எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது விபரீத ராஜயோக காலம். எதிர்பாராத நல்ல விசயங்கள் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. எந்த விசயமாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. மாத பிற்பகுதிக்கு மேல் உங்களுக்கு கிரகங்கள் மாறுகின்றன.
மாத பிற்பகுதியில் சூரியனும், புதனும் இடம் மாறி அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் பலம் அதிகரிக்கும், பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும். வேலை விசயத்தில் பிரச்சினை வந்தாலும் நல்ல வேலை கிடைக்கும். திருமண தடைகள் வரலாம், எனவே நிதானம் தேவை. மாணவர்களுக்கு மாத பிற்பகுதியில் நல்ல விசயங்கள் நடைபெறும். பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்திலும் உங்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

கடகம்

கடகம்


மாத ஆரம்பத்திலேயே ராசி நாதன் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் உள்ள செவ்வாய் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பார். வேலை வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நீங்க நினைத்த காரியம் நடைபெறும். குருவின் பார்வை உங்களின் ராசிக்கு கிடைப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சனி ஏழாம் வீட்டில் இருப்பதால் திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெறும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு சில சோதனைகள் வரலாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லவும். வீடு மனை வாங்கலாம். வண்டி வாகனம் வாங்கலாம். சூரியன், புதன் இணைந்து சஞ்சரிப்பதால் யோகம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் புதன் சூரியன் இணைவதால் போட்டி தேர்வுகள் எழுதுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஐந்தாம் வீட்டில் உள்ள கேதுவினால் வயிறு பிரச்சினை வரலாம். ஜீரண கோளாறுகள் வரலாம். வெளி உணவுகளை சாப்பிடும் போது கவனம் தேவை. கண்டச்சனி காலம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாப்பிடும் விசயங்களில் கவனம் தேவை. மனதில் சில குழப்பங்கள் வரலாம் தியானம் செய்வது குழப்பங்களை போக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+