December Matha Palan: கும்ப ராசிக்கு டிசம்பர் மாதத்தில் நடக்கும் மாற்றங்கள்.. ரொம்ப கவனம்
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனி லாப ஸ்தானத்தைப் பார்க்கிறது. நண்பர்கள் மூலம் இழப்புகள் ஏற்படும். கால் முட்டியில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகள் மூலமாக பிரச்சனைகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு வக்ர நிவர்த்தியாவதால் ஒரு விதத்தில் நன்மையும், ஒரு விதத்தில் நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.
கவனம்
பழைய விஷயங்கள், பழைய கர்மாக்கள் அனைத்தும் சரியாக நடக்கும். புதிய கர்மாக்களை செய்யும் போது தர்மத்திற்கு மீறி சில விஷயங்கள் நடக்கும். மற்றவர்களால் மன அழுத்தம், அறுவை சிகிச்சை செய்வது, மூத்த அண்ணன் பிரச்சனை செய்வது, நண்பர்களுக்கு பணம் கொடுத்து சிக்குவது போன்ற பாதிப்புகளைச் சந்திப்பீர்கள்.
அரசியல் பதவி
குரு வக்கிரமாக இருப்பதால் யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்கிற குழப்பம் ஏற்படும். 2 ஆம் இடத்தில் சனி அமர்ந்திருப்பதால் எந்த விஷயத்தை பேசலாம் வேண்டாம் என்கிற குழப்பம் ஏற்படும். பண விஷயத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இருக்காது. நிறைய பேருக்கு அரசியல் பதவிகள் கிடைக்கும். நிறைய பிரஷர் ஏற்படும்.
அனுகூலம்
கும்பத்தில் இருப்பவர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் குரு ஒன்றுதான் ஆறுதல். 10 ஆம் இடத்தில் இருக்கும் புதன், சுக்கிரன் உங்களுக்கு வண்டி வாகனங்கள், சினிமா, மருத்துவம் சார்ந்தது உங்களுக்கு சாதகமாக மாறும். புதன், சுக்கிரன் உங்களுக்கு சேர்ந்திருக்கும் வரை பிரச்சனையே ஏற்படாது. மற்றபடி உங்களுக்கு எதுவுமே சரியாக இல்லை. கும்பத்தில் ராகு வெளியே போகும் வரை மனக் கலக்கம் இருக்கும்.
வழிபாடு
வேலை சுறுசுறுப்பாக இருக்கும். சந்தோஷமான மனநிலை ஏற்படும். நல்ல காரியங்கள் நிறைய நடப்பதற்கான வாய்ப்புள்ளது. பெரிய விஷயங்கள் நடக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications