December Matha Palan: டிசம்பர் மாதத்தில் மீனம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வாய்ப்புகள் தேடி வரும்
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு கால் முட்டியில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. கோவிலுக்குச் செல்லும்போது தடுக்கி விழுவது, கழிவறை செல்லும்போது பாதிப்பு ஏற்படுவது, கால் முட்டிகளில் பிரச்சனை ஏற்படுவது போன்றவை ஏற்படும். தூர பயணம் மேற்கொள்ளும்போது அழுத்தம் ஏற்படும். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் வரும். லீகல் பிரச்சனைகள் ஏற்படும். தொலைதூரம் பயணம் மேற்கொள்பவர்கள் ஆவணங்களை சரிபார்த்து விட்டு செல்வது நல்லது. விரயத்தில் இருக்கும் ராகு உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். பயங்கரமான அழுத்தம் ஏற்படும். நிறைய அலைச்சல் டென்சன் ஏற்படும். ராசியதிபதி 4 ஆம் இடத்தில் குரு வக்கிரம் என்பது இருக்கும் வீடு, இருக்கும் இடம் தான் பாதுகாப்பு. அதில் இருந்து மாறுவது பாதிப்பைத் தரும்.
ஆரோக்கியம்
வீட்டில் நிறைய பிரச்சனைகள், தண்ணீர் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். சளி தொந்தரவு, கால் முட்டி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சேர்ந்திருப்பது லட்சுமி நாராயண யோகத்தைக் கொடுக்கும். வீட்டில் தினந்தோறும் ஆராதனை செய்வது, திருமஞ்சனம் செய்வது, பெருமாளை மனதார வணங்குவது, விஷ்ணுவை சஹஸ்ஹர நாமம் பாராயணம் செய்வது உங்களுக்கு யோகத்தைக் கொடுக்கும்.
பயணங்கள்
நல்ல அறிவுக் கூர்மை, புத்திசாலித்தனமான குழந்தைகள் கண்டிப்பாக இருப்பார்கள். பாக்கியத்தில் புதன், சுக்கிரன் அமர்ந்திருப்பது உங்களுக்கு அற்புதமான யோகத்தைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள், பெரிய பெரிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நல்ல எண்ணங்கள் தோன்றும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சில விஷயங்கள் சரியில்லை என்றாலும், சில விஷயங்கள் நன்றாக இருக்கும்.
வழிபாடு
சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கக் கூடிய மாதமாக இருக்கும். நிறைய பரிசுகள் உங்களுக்கு வந்து சேரும். சுவாமி தரிசனத்தில் முதல் மரியாதை கிடைக்கும். நிறைய வெற்றிகளைப் பார்க்கக்கூடிய மாதமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications