December Matha Palan: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது.. பணவரவு கன்ஃபார்ம்
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபத்தில் குரு வக்கிரமாக இருக்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் இருக்கிறது. பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை, உங்களுக்கு சளி தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல், அரசாங்கம் மூலமாக பெரிய லாபங்கள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
மகிழ்ச்சி பொங்கும்
பழைய நண்பர்களுடன் ஒன்று சேர்வீர்கள். நண்பர்கள் செய்த தப்புகளை கண்டறிவீர்கள். உங்களுக்குத் தெரியாமல் நண்பர்கள் செய்த சூழ்ச்சி கண்டறிந்து முறியடிப்பீர்கள். டிசம்பர் மாதத்தில் மிகுந்த பரபரப்புடன் காணப்படுவீர்கள். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தின் திரிகோணமான சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் இணைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நிறைய புதிய ஆராய்ச்சிகளை செய்வீர்கள்.
பணவரவு
வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில், படிப்பு, உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றத்தைப் பெறுவீர்கள்.
யோகம்
வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்கும் யோகம் உண்டாகும். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியனும், செவ்வாயும் சேருவதால் இரவு நேரத்தில் தூக்கம் வராது. படபடப்பு, டென்சன் போன்றவை அதிகமாக இருக்கும்.
வழிபாடு
முதலீடுகள் நிறைய வரும். வியாபாரம் விருக்தி அடையும். இதயம் சார்ந்த விஷயங்களில், கொழுப்பு சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்கி வேண்டும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 70 சதவீதம் நன்றாக இருக்கும். சூரிய நாராயணப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications