December Matha Palan: டிசம்பர் மாதத்தில் டபுள் தமாக்கா.. அதிர்ஷ்டம் கொட்ட போகும் 6 ராசிகள்
டிசம்பர் மாத பலன்கள் 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். தமிழ் மாதமான மார்கழியும் பிறக்க போகிறது. மாதங்களில் சிறந்தது என்றழைக்கப்படும் மார்கழி மாதம் பிறக்கவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கம் ஏற்படுத்தும். இந்தப் பதவில் நற்பலன்கள் பெறும் 6 ராசிகள் குறித்து காணலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
உலக நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் கண்டம் உள்ளது. அரசியலில் போட்டி, மோதல்கள் அதிகரிக்கும். சில தலைவர்களுக்கு ஆரோக்கியத்தில் தொந்தரவு, வழக்குகளில் கைது நடவடிக்கை இருப்பதற்கு வாய்ப்புள்ளது. குரு வக்கிரமடைந்து மிதுன ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் கபுதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும்.
மார்கழி
குரு வக்கிரமாக இருப்பதால் பிரேக்கிங் நியூஸ்களுக்கு பஞ்சம் இருக்காது. பயணங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மிகப்பெரிய விபத்து நடைபெற வாய்ப்புள்ளது. விமான விபத்து நிகழ வாய்ப்பிருக்கிறது. கோயில்களில் நடைபெறும் சின்ன சின்ன விஷயங்கள் கூட அரசாங்கத்தை ஆட்டி பார்க்கும். மழை, வெள்ளம் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். சென்னை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படலாம். மார்கழி மாதம் தொடங்கவுள்ளது.
பாதுகாப்பு
கோவை, திருப்பூர், ஈரோடு, தாராபுரம், சென்னிமலை, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இயற்கை சீற்றங்கள், அந்த ஊர் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள், முதியோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குரு வக்கிரமாக இருப்பதால் ஆட்சியில் இருப்போர் தர்மத்திற்கு மீறிய காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்தப் பகுதிக்கு சென்றாலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
பண வரவு
லட்சுமி நாராயண யோகத்தால் விருச்சிகம் ராசிகளுக்கு அருமையாக இருக்கும். இந்த இரண்டு ராசிகள் இந்த மாதம் எல்லா வகையிலும் அதிர்ஷ்டங்களை பெறுவார்கள். ரிஷபம் ராசியும் அதிக நற்பலன்களை பெறுவார்கள். துலாம் ராசிக்கு அதிகளவு பண வரவு இருக்கும். கும்பம், மிதுனம் ராசிகளுக்கு பொருளாதாரம் உயர்வடையும். மேற்சொன்ன அனைத்து ராசிகளுக்கும் வீடு, நிலம், புதிய கடன், வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.
கவனம்
மகர ராசி ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேஷம் மற்றும் தனுசு ராசி வண்டி வாகனத்தில் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும். கொழுப்பு சார்ந்த பிரச்சனைகள், காய்ச்சல், சுழுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. குழந்தைகள் விஷயத்திலும் இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும். சிவன், முருகன் வழிபாடுகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications