Rasi Palan This Week: தனுசு ராசியினர் இதை மட்டும் செய்து பாருங்க.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி 9 முதல் ஆவணி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் ஏற்றம் ஏற்படும். படிப்பு, உத்தியோகம், தொழில் தடை அனைத்தும் நீங்கும் யோகம் உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றிகளை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் தீரும். முயற்சிகளால் அனுகூலம் கிடைக்கும். வியாபாரம் மூலமாக அதீத ஏற்றம் பெறுவீர்கள்.
யோக பலன்
எல்லா விதமான யோக பலன்களும் கிடைக்கும். சிறு சிறு தடைகள் காணப்பட்டாலும் ஞாயிற்றுக்கிழமை பசுமை மாட்டிற்கு அகத்தீரை தவிர மற்ற உணவுகளை தானமாக கொடுப்பது சந்தோஷமான சூழ்நிலையை உண்டாக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்றவை சிறப்பாக இருக்கும்.
வெற்றி
காலையில் நேரமான எழுந்து திட்டமிட்டு எந்த காரியங்களை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள். காலை 6 முதல் 7 மணிக்குள் அகல் தீபம் ஏற்றி வைத்து மனதாரப் பிரார்த்தனை செய்தால் நீங்கள் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றியைப் பெறுவீர்கள். தொடர்ச்சியாக இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள்.
தடைகள் நீங்கும்
உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் இனி தவிடு பொடியாகும். முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும்.
ஆரோக்கியம், வழிபாடு
மன அழுத்தம், வயிறு, ஜீரணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எளிய முறையில் ஜீரணமாகும் விஷயங்களை சாப்பிட்டுக் கொள்வது நல்லது. ராகவேந்திரர் வழிபாடு உங்களுக்கு சகல விதத்திலும் நம்பிக்கையும், ஜெயத்தையும் ஏற்படுத்தும். அசிடிட்டி தொடர்பான விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications