This Week Rasi Palan: தனுசு ராசிக்கு தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம்.. இந்த வாரத்தில் வரும் மாற்றம்
வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்களின் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளுக்கு எந்தவிதக் குறைவும் ஏற்படாது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் வருகை தருவார்கள். கணவன், மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும்.
பயணங்கள்
நண்பர்கள், உறவினர்களுடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்கள் செய்யும் பாக்கியம் உண்டு. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
அனுகூலம்
தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் அபிவிருத்தி உண்டாகும். ஏற்றமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். புதிய அறிமுகங்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக நல்ல வேலை ஆட்கள் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள்.
பாதிப்புகள் நீங்கும்
தொழிலில் இருந்த சிக்கல்கள், பாதிப்புகள் நீங்கும். பண வரவு நன்றாக இருக்கும். நல்ல முதலீடுகளைச் செய்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திட்டமிட்ட காரியங்களை நல்லபடியாக செய்து முடிக்கும் யோகம் உண்டு. புதன்கிழமைகளில் தேவி வழிபாடு, அம்பாள் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications