Rasi Palan This Week: இனிமேல் எல்லாம் அப்படித்தான் - தனுசு ராசிக்கு டாப் டக்கர் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரம். உத்யோகம், தொழிலில் ஏற்றம் காணப்படும். தொழிலில் லாபம் இருக்கும். வீடு, நிலம், ஆபரணங்கள் போன்ற அசையும், அசையா பொருட்கள் சொத்து சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் எதிர்பார்த்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மாணவர்கள் கல்வி, விளையாட்டில் தடம் பதிப்பார்கள்.
தைரியம்
கடந்த காலங்களில் தடைபட்ட காரியங்கள் நிவர்த்தியாகும். உத்யோகம், தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கம். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். பழைய பாக்கி வசூலாகும். பணப்புழக்கம் சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
பயணங்கள்
கடவுளின் ஆசிர்வாதம் முழுமையாக காணப்படும். சமூகத்தில் உங்களின் புகழ், அந்தஸ்து உயரும். வெளியூர், வெளி மாநில பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொலை தூரங்களில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரிய தடைகள் நிவர்த்தியாகும். கலை, ஊடகம், சினிமா, மருத்துவம் துறையினருக்கு அமோகமாக இருக்கும்.
மதிப்பு மரியாதை
உங்கள் வார்த்தைக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கழுத்து, வயிறு, கால் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கவனம் தேவை. பெருமாள், கிருஷ்ணர், விஷ்ணு வழிபாடு அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். செவ்வாய்க்கிழமை மதியம் உங்களால் முடிந்த அன்னதானம் செய்வதும், ஞாயிற்றுக்கிழமை பசுமாடுக்கு கோதுமை தவிடு, வெல்லம் போன்றவற்றை தானம் செய்வதன் மூலம் நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications