Rasi Palan This Week: தனுசு ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Dhanusu Lucky zodiac signs

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும் காலகட்டம். மனதிற்குப் பிடித்த இடத்துக்கு சென்று மகிழ்வீர்கள். மனதிற்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள் வருவது என அனுகூலங்கள் காணப்படும். வேலை ஆட்களால் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தியாகும். முதலாளிக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும்.

அனுகூலம்

பிள்ளைகள் விஷயங்களில் அனுகூலங்கள் காணப்படும். பிள்ளைகளுக்காக சில கடன்களைப் பெறக்கூடும் அமைப்பு ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். குடும்பத்தில் இருக்கும் துணை மற்றும் காதல் அமைப்புகளில் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். நடப்பில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி நிவர்த்தியாகும்.

முன்னேற்றம்

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும் சாத்திக் கூறுகள் உண்டு, வியாபாரம், தொழில், படிப்பு, உத்தியோகத்தில் நல்ல ஏற்றத்தையும், வளர்ச்சியையும் பெறும் காலகட்டம். ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து செயல்படும் விஷயங்களில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தடைகள் நீங்கும்

வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த காரியங்கள் நிறைவேறும் காலகட்டமாக இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவநமாகச் செல்வது நல்லது. வண்டி, வாகனங்களில் மாற்றம் ஏற்படும். காதல் அமைப்பில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

விநாயாகர் வழிபாடு உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். காரியசித்தி மாலையை சொல்லி வருவது அனுகூலமும், சந்தோஷமும், ஏற்றமும் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையைத் தவிர மற்ற உணவுகளை அளிப்பது தடைகளை தவிடு பொடியாக்கும். செவ்வாய்க்கிழமை மதிய வேளைகளில் சாப்பாடு மற்றும் எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது உங்களுடைய விரயத்தைக் குறைத்து சுப விரயமாக மாற்றும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+