Rasi Palan This Week: தனுசு ராசியினருக்கு வேலையில் காத்திருக்கும் ஆபத்து.. பொறுமை அவசியம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

dhanusu-rasi-palan-what-kind-of-benefits-that-dhanusu-signs-will-get-from-dec-28-to-jan-4

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரும் அமைப்புள்ளது. தொழில், உத்தியோகத்தில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான அமைப்பு ஏற்படும். குடும்பத்தில் சிறிய குழப்பங்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளில் மேன்மை ஏற்படும். சளி தொடர்பான தொந்தரவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

ஏற்றம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் உண்டாகும். பெரிய நம்பிக்கையும், சந்தோஷமும் ஏற்படும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் பரிபூரணமாக நீங்கும். அனைத்து விதமான விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும்.

தர்க்கம் வேண்டாம்

மேலதிகாரிகளிடம் தர்க்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிக வேகத்துடன், மறைமுகமான எண்ணத்துடன் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பேப்பர் போடுகிறேன், ராஜிாமா செய்கிறேன் என்று உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு போன்ற விஷயத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

பொறுமை அவசியம்

வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள், ஜிஎஸ்டிகள், இன்கம் டாக்ஸ் போன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. செல்வாக்கு தொடர்பான சிக்கல்கள் வரும் வாய்ப்புள்ளதால் பொறுமை காப்பது நன்மை பயக்கும். அவசரப்படுவது, மேலதிகாரிகள், தெரிந்தவர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண விஷயங்களில் பஞ்சம் இருக்காது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. நரம்பு, தலைவலி, கழுத்துப் பகுதி சுழுக்குகள் போன்றவற்றில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. நவக்கிரகத்தில் இருக்கும் புதன் வழிபாடு நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+