Dhanusu Rasi Palan: சிக்கலில் சிக்கும் தனுசு ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி
சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு 10 ஆம் இடம் என்பது தொழில் ஸ்தானம், மாமியாருக்கு உரிய ஸ்தானம், கர்ம ஸ்தானம். புற வாழ்க்கையில் இருக்கும் வேலையும், அக வாழ்க்கையில் இருக்கும் வேலையும் கர்ம ஸ்தானம். அக வாழ்க்கையில் இருக்கும் வேலை என்பது வீட்டில் பெரியவர்களின் இறப்பு, அல்லது அது தொடர்பான செய்தி வந்து சேரும். அம்மா, அப்பா, மாமியார், மாமனார், தாத்தா, பாட்டி ஆகியோரின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வேலைமாற்றம்
வேலை நன்றாகச் செய்து கொண்டிருக்கும். திடீரென உங்களுடைய பாஸுக்கும், உங்களுக்கும் பெரிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனை நீங்கள் சமாளிக்கும் சூழல் உருவாகும். தேவையே இல்லாத கற்பனை, பிரச்சனை வந்து சேரும். வேலை மாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் பெருமாள் கோயில், நதி, குளம் போன்றவை இருப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும்.
பொறுமை அவசியம்
வரும் 40 நாட்களுக்கு மட்டும் பொறுமையைக் கடைப்பிடித்தால் போதும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். ஆனால், வெளியில் சொல்லாமல் செய்வது நன்மை பயக்கும். இந்த கேது கிரஸ்த சூரியகிரகணத்தில் மட்டும் செய்யும் வேலைகளை வெளியில் சொல்லக் கூடாது.
தேவையில்லாத பிரச்சனை
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் இருக்கும் நபர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அரசு நமக்கு எதிராக நிறைய கொள்கைகளை வகுக்கக்கூடிய சூழல் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. அரசு அதிகாரிகள் பிரச்சனைகள் இடமாற்றம் ஏற்பட்டு செல்வதற்கான வாய்ப்புள்ளது. சில பேர் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். மெமோ வாங்குவார்கள். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. வேலையில் இருந்தாலும் கவனம் தேவை.
மருத்துவர்கள் கவனம்
மருத்துவர்களாக இருக்கும் தனுசு ராசியினர் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் செய்யும் அறுவை சிகிச்சையில் கவனம் தவறியதால் பெரிய பிரச்சனை, சர்ச்சைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. பெயர் கெடக் கூடும். 2 மருத்துவர்களுக்கிடையே பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசியினரும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
அயோத்தி ராமர் வழிபாடு செய்வது உங்களுக்கு மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். மன சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை, பெரியவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அயோத்தி ராமரின் பாதங்களில் புஷ்பத்தை வைத்து வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications