Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் தனுசு ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம்
Dhanusu Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உறவுகள் விஷயத்தில் மேன்மை உண்டாகும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தரவாதத்துடன் எடுக்கக்கூடிய முடிவுகளில் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகளில் ஏற்றம் ஏற்படும்.
முயற்சிகளில் வெற்றி
முடிவுகள் அனைத்திலும் நல்ல ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். . உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களில் பெரும் வெற்றி ஏற்படும். இழந்த பணம், பதவி, தொழில், உத்தியோகம், பணத்தை மீண்டும் பெறக்கூடிய யோகம் ஏற்படும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வெளியூரில் வேலை கிடைப்பது, வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பெரிய பணங்கள் கிடைப்பது போன்ற யோகங்கள் உண்டாகும். தாயின் மூலமாக நல்ல உதவிகள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய வெற்றிகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பணவரவு
எதற்காகவும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. முயற்சிகளில் வெற்றி ஏற்படும். தேவைக்கு அதிகமாக பணம் கிடைக்கும். சொந்த ஊரிலேயே சுற்றுலா சென்று வரவீர்கள். திட்டமிடல் உங்களுக்கு நடக்கும். வீடு அமையும். இளைய சகோதரன் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.
யோகம்
எந்தவொரு விஷயங்களையும் வெளியில் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. போனில் பேசும்போதும், சாட்களில் பேசும்போதும் அதனை வெளியில் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்கள் நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பெரிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக இருப்பது நல்லது. வண்டி, வாகனங்கள் விலையுயர்ந்த பொருட்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
வழிபாடு
கழுத்து, கை பகுதி, கால் முட்டி, சளி, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சியும் ஏற்படும். சிவன் வழிபாடு அற்புதமான அமைப்பை ஏற்படுத்தும். சந்தோஷம் 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 95 சதவீதமும் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications