Rasi Palan This Week: தனுசு ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. சொல்லி அடிப்பீங்க
Dhanusu Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Dhanusu rasi palan]

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஏ கிளாஸ் யோகம் உண்டாகும். என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது தானாக நடக்கும். காத்திருந்த விஷயங்கள் எல்லாம் இப்போது கைகூடி வரும். புதிய விஷயங்களை எடுத்துச் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். புதிய விஷயங்களை எடுத்து ஜெயிக்கும் யோகம் உண்டாகும். மன வியாதி நிவர்த்தியாகும்.
குரு வக்கிர நிவர்த்தி
மனதில் இருக்கும் சங்கடங்கள், டென்ஷன் போன்றவை குறையும். நிறைய குழப்பங்கள் ஏற்படும். எந்த குழப்பங்கள் ஏற்பட்டாலும் தைரியமாக இருக்கலாம். லக்னத்துக்கும், ராசிக்கும் குரு பார்வை இருப்பதால் நல்ல காலகட்டமாக இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் குறை ஏற்பட்டாலும் நிவர்த்தியாகும். 12 ஆம் தேதிக்குப் பிறகு குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் பாசிட்டிவான யோகம் உண்டாகும்.
யோகம்
7 ஆம் இடத்தில் குரு இருப்பது அற்புதமான யோகத்தைக் கொடுக்கும். எல்லா முயற்சிகளும் வெற்றியைத் தரும். 3 ஆம் இடத்தில் இவ்வளவு கிரகங்கள் இருப்பது நிறைய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். 2, 3 ஆஃபர் வரும். இளைய சகோதரர்கள் விஷயத்தில், வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் தீரும். புதிய விஷயங்களை ஆரம்பிப்பீர்கள். நினைத்த விஷயங்களை செய்து முடிக்கும் யோகம் உண்டாகும்.
முயற்சிகளில் வெற்றி
எல்லா விஷயங்களையும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்கிற அந்நியோன்யம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் ஜெயம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மன வலிமை அதிகரிக்கும். நிறைய நல்ல விஷயங்கள் தானாகவே நடக்கும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். யாராவது ஒருவர் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
செல்வாக்கு கூடும்
யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். வேலை ஆட்களால் நன்மைகள், சந்தோஷம் ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்றம் மிகுந்த காலகட்டம், எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும் காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
வழிபாடு
அசையும், அசையா பொருள்கள் சேரக்கை ஆனந்தத்தை ஏற்படுத்தும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியான அபிவிருத்திகள் ஏற்படும். 12 ஆம் தேதியில் இருந்து நன்றாக இருக்கும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீத முன்னேற்றமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் வழிபாடு வளர்ச்சியைத் தரும். நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய கேது வழிபாடு நன்மையைத் தரும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications