Dhanusu Rasi Palan: மே மாதத்தில் தனுசு ராசிக்கு யோகமான காலம்.. என்ன சொல்கிறது ஜோதிடம்?
மே மாத பலன்கள் 2026: தனுசு ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், தனுசு ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பணம், காசிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பம் ஒன்று சேரும். கணவன், மனைவி ஒன்று சேரக்கூடிய யோகம் உண்டாகும். காதல் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுற்றுலா சென்று வருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் நன்றாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
ஆரோக்கியம்
நினைத்த விஷயங்களை சாதிக்கும் யோகம் உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியம், அப்பா, மாமனாரின் ஆரோக்கியம், கண் பிரச்சனை, வயிறு பிரச்சனை போன்றவை பெரியவர்களுக்கு இருக்கும். 7 ஆம் இடம் பலமாக இருப்பதால் நினைத்த காரியங்கள் சரியாக நடக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அவை சரியாகப் பொருந்தும்.
அனுகூலம்
முழு தெய்வ அனுக்கிரகங்களும் இருக்கும் காலகட்டம். புதிய விஷயங்களை எடுத்து செய்வீர்கள். முழு தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். விரயத்தில் அமர்ந்திருக்கும் சூரியனின் பார்வை இருப்பதால் வெளியூர் செல்வது, வெளிநாடு செல்வது, இடமாற்றம் கொடுப்பது போன்றவை நடக்கும். மன அமைதி மிகப்பெரிய அளவில் கிடைக்கும்.
முன்னேற்றம்
பல புதிய மாற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைக்கும் மாதமாக அமையலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில விஷயங்கள் சாதகமாக முடிவடையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படலாம். வேலை தொடர்பான விஷயங்களில் கவனம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும் சூழல் உருவாகலாம்.
பணவரவு
புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணவரவு சீராக இருக்கும். முன்பு நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டம்
மன அமைதி மிகப்பெரிய அளவில் இருக்கும். அரசியலில் நல்ல இடம் கிடைக்கும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களையும் சரியாக செய்து முடிக்கும் யோகம் உண்டாகும். மனைவி மூலமாக, கணவர் மூலமாக அதிர்ஷ்டம் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.
தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு அற்புததத்தை ஏற்படுத்தும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 100 சதவீதமும் நன்மைகளைத் தரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications