Dhanusu Rasi Palan: ராஜயோகம் பெறும் தனுசு ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. என்ஜாய்
சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன்14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் விருச்சிகம் ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி, லக்கினக்காரர்களுக்கு கடன், நோய், பகையை தரக்கூடிய சுக்கிர பகவான் 8 இல் மறைகிறார். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்குத் தேடி வரும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் மட்டும் சிறிது கவனமாக இருப்பது நல்லது. கடன் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. சுக்கிரன் சந்திரன் வீட்டில் இருப்பதால் சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பு, சர்க்கரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.

வேலை
பண வரவு அற்புதமாக இருக்கும். வெளிநாடு, வெளிமாநிலம், அந்நிய தேசம் மூலமாக தன வரவு கிடைக்கும் யோகம் உள்ளது. வேலையை கொடுக்கக் கூடியவர் சுக்கிரன். உங்கள் ஊரை விட்டு விலகி வேலை செய்யும் யோகம் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல விரும்புபவர்களுக்கு வெற்றித் தரக்கூடிய காலகட்டம்.
பண வரவு
காப்பீடு, பங்குச் சந்தை போன்றவற்றில் இருந்து தன வரவு கிடைக்கும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. 8, 11 இணையும்போது திடீர் லாபங்கள் ஏற்படும். பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் எந்தவித பாதிப்பும் வராது. உணர்வுகள், அகம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பதவி உயர்வு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆளுமைத் திறன், தலைமைப் பண்பு போன்றவை சிறப்பைத் தரும். லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீங்கள் செய்யும் தொழில்கள் அறிவு சார்ந்த தொழில்களாக இருந்தால் நன்மை கிடைக்கும் நல்ல காலகட்டம். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் டென்சன் ஏற்பட்டாலும் தன வரவு கிடைக்கும். எதிர்பாராத லாபம், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வீடு, இடம் வாங்கும் யோகம்
ஜவுளி தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் வீடு, இடம் வாங்கும் யோகம் ஏற்படும். வீட்டை புனரமைப்பது, வீடு மாற்றுவது, வீடு கட்டுவது போன்ற எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத விதமான திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வண்டி, வாகனம், அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உள்ளது. ஆவணங்கள் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்கு இருமுறை ஆய்வு செய்து கொள்வது நல்லது.
தொழில்
ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனியின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். சுக்கிரனும் புதனும் 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணத்தைப் பெருக்கும் எண்ணம் உண்டாகும். பேச்சை, அறிவை வைத்து செய்யும் தொழில்கள் சிறப்பு பெறும். அக்கவுண்ட், ஆடிட்டிங், கணினி துறை அற்புதமாக இருக்கும்.
மாற்றம்
திருமணங்கள் சார்ந்த சுப காரியங்கள் செய்யும் அமைப்பு உண்டாகும். சுக்கிரன் 8 இல் மறைந்தாலும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், திருமண யோகம் கிடைக்கும். முயற்சிகள் பலிக்கும் யோகம் உள்ளது. செப்டம்பர் 4 முதல் 14 ஆம் தேதி வரை சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். அனைத்துவிதமான மாற்றங்களும் ஏற்படும்.
வழிபாடு
ஆவணி மாதம் 31 ஆம் தேதி சுக்கிர பகவான் ஜெயந்தி தினத்தன்று நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெண்பட்டு வஸ்திரத்தை சாற்றி 6 நெய்விளக்கு தீபமேற்றி வழிபடுவது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications