Dhanusu Rasi Palan: குறி வச்சா இரை விழும் யோகம்.. தனுசு ராசிக்கு அற்புதமான மாற்றங்கள் வரப்போகுது
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புத மாற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். ஆரம்பத்தில் சுக்கிரன் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் பிறகு 9 ஆம் இடத்துக்கு வருகிறார். 10 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் 15 ஆம் தேதிக்குப் பிறகு 11 ஆம் இடத்துக்கு குருவின் பார்வையில் வரப் போகிறார். 7, 8, 9, 10 ஆகிய இடங்கள் அனைத்தும் பெரிய நன்மையைத் தரப் போகிறது.
நல்ல பலன்கள்
கிரகங்களின் சுழற்சியில் தனுசு ராசியினருக்கு நல்ல பலன்கள் அடையும் யோகம் உள்ளது. 10, 11 ஆம் இடத்தில் சூரியனும், செவ்வாயும் மிகப்பெரிய நல்ல பலன்களைத் தருவார்கள். 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் 10 ஆம் இடத்துக்கு வருவார். நல்ல வலுவான தலைமை பொறுப்பு, சம்பள உயர்வு, பதவி உயர்வு, தைரியமாக தொழில் அமைக்கும் தன்மை உண்டாகும்.
தொழிலில் முன்னேற்றம்
நல்ல வேலை ஆட்கள் உங்களுக்கு அமைவார்கள். 10 ஆம் அதிபதியான ஜீவனாதிபதியான புதனும் அந்த இடத்திலேயே உச்சமாக இருக்கிறார். இதுவரைக்கும் தொழிலில் சாதிக்க முடியவில்லை என நினைத்தவர்கள், அவமானம், பாதிப்புகள், காலை வாரிவிடும் நிலைமை போன்ற அனைத்து துன்பங்களும், கஷ்டங்களும் தொழில் ரீதியாக உங்களுக்கு நீங்கிச் செல்லும்.
அற்புதமான அமைப்பு
அந்தஸ்து, கெளரவம் உயரும். 9 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் தந்தையைப் பற்றிய கவலைகள் விலகப் போகும் நல்ல மாதமாக இருக்கும். அரசாங்க அனுமதி கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இனி உதவிகள் கிடைக்கும். பெரிய நல்ல மாற்றம் இருக்கும் அற்புதமான அமைப்பு ஏற்படும். 3 ஆம் இடத்தில் ராகு இருக்கிறார். 4 இல் சனி இருக்கிறார்.
குருவின் வீட்டில் சனி
4 இல் அர்த்தாஷ்டம சனி இருந்தாலும் குருவின் வீட்டில் தான் இருக்கிறார். அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. அம்மாவிடம் இருந்து விலகி இருப்பீர்கள். வீடு, வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 9 கிரகங்களில் சனியைத் தவிர 8 கிரகங்களும் வலிமையான அமைப்பில் உள்ளன. வீடு, வாகனம், தன்சுகம், அம்மா விஷயத்தில் சிறு சிறு குறைகளை சனி பகவான் தருவார்.
வெளிநாடு யோகம்
முயற்சிகள் பலிக்கக்கூடிய தன்மைகள் ஏற்படும். தந்தையிடம் இருந்து நல்ல தகவல்கள் வரும். அப்பாவால் கிடைக்கக்கூடிய விஷயம் கிடைக்கும். தந்தையிடம் இருந்து அனுமதி கிடைக்கும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு போகக்கூடிய அமைப்பு உண்டாகும்.
ஏற்கனவே வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இருக்கின்ற இடத்திலேயே நல்லவை நடக்கும் தன்மை உண்டாகும். தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை நடக்கக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்றம் மிகுந்த காலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications