Diwali Rasi Palan: 2025 தீபாவளி முதல்.. 2026 புத்தாண்டு வரை.. 12 ராசிகள் பெறப்போகும் பலன்கள்
தீபாவளி பலன் 2025: தீபாவளி கொண்டாட்டத்தில் இருக்கிறோம். தீபாவளி தொடங்கி 2026 ஆங்கில புத்தாண்டு வரை கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்கள் இருக்கப் போகின்றன. அடுத்த 60 நாட்கள் எக்கச்சக்க மாற்றங்கள் இருக்கப் போகின்றன. குரு பகவான் அக்டோபர் 18 ஆம் தேதி கடகம் ராசியில் உச்சம் பெற்றுள்ளார். நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் ஆட்சி பலம் பெறவுள்ளார். ரிஷபத்துக்கும், துலாமுக்கும் உச்சமாக உள்ள சுக்கிரன் துலாம் ராசியில் உச்சம் பெறுகிறார். 2025 தீபாவளி முதல் 2026 புத்தாண்டு வரை 12 ராசிகளும் பெறப்போகும் பலன்களை காணலாம்.
மேஷம் - நான்காம் இடத்தில் குரு பகவான் வருகிறார். நிலம், வீடு, வண்டி, வாகனம் வரவு உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சுக ஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் உத்யோகம், தொழிலில் நிம்மதி கிடைக்கும். செவ்வாயை குரு பகவான் பார்ப்பதால் வம்பு, வழக்கு, நிலம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலை உருவாகும்

ரிஷபம் - குரு பகவான் மூன்றாம் இடத்தில் விபரீத ராஜயோகம் பெறுகிறார். தங்கம், ஆபரணங்கள் சேர்க்கை இருக்கும். கடன் சுமை நீங்கும். 11 ஆம் இடத்தில் சனி வக்ர நிவர்த்தியவாதால் தொழில் விரிவாக்கம் ஏற்படும். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். ஏழாம் இடத்தில் உள்ள செவ்வாயை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். திருமண யோகம் கைக்கூடி வரும்.
மிதுனம் - இரண்டாம் இடத்தில் குரு பகவான் உச்ச பலம் பெறுகிறார். பண வரவு பெருகும். கடன் சுமை குறையும். உத்யோகம், தொழிலில் லாபம் கூடும். விட்டுப் போன பணம் எல்லாம் தேடி வரும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். பிரிந்த தம்பதி இணைவார்கள். காதல் உறவில் இனிமை கூடும். சனி வக்ர நிவர்த்தியாவதால் பெயர், புகழ் அதிகரிக்கும். கல்லீரல், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களில் நிவர்த்தி கிடைக்கும்.
கடகம் - உங்கள் சொந்த ராசியில் குரு பகவான் அமர்ந்துள்ளார். சுப காரிய தடைகள் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். ஐந்தாவது இடத்தில் செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். அரசு பணிக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல செய்தி தேடி வரும். கனவுகள் மெய்ப்படும். வீடு, நிலம், நகை, சொத்து சேர்க்கை இருக்கும். பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் காணப்படும். கடன்கள் தீரும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையுடன் அந்யோநியம் கூடும்.
சிம்மம் - குரு பகவான் 12 ஆம் இடத்தில் மறைவதால் விபரீத ராஜயோகம் கிடைக்கும். நீங்கள் நடக்காது என்று நினைத்த விஷயங்கள் நடைபெறும். பெரும் நஷ்டம் தடைபடும். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சனி வக்ர நிவர்த்தியாகி, குரு பார்வை பெறுகிறார். அஷ்டம சனி பாதிப்பு சற்று குறையும். பண வரவு சீராக இருக்கும். வீண் விரயம் குறையும். பூர்விக சொத்து கைக்கு வந்து சேரும்.
கன்னி - குரு பகவான்11 ஆம் இடத்தில் இருந்து உங்களை கஷ்டங்களில் இருந்து காப்பாற்ற போகிறார். சகோதர வழி பிரச்சனைகள் குறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் உறவில் நன்மை ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் எதிர்பார்த்த காரியம் கிடைக்கும். போட்டி தேர்வுகள் முயற்சி செய்வோருக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் உண்டாகும்.
துலாம் - குரு பகவான் 10 ஆம் இடத்திற்கு வருவதால் உத்யோகத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். யாருடனும் வாக்குவாதம் செய்யாமல் பொறுமையாக இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். சனி 6 ஆம் இடத்திற்கு வருவதால் பண வரவு அதிகரித்து, கடன் சுமை குறையும். செவ்வாய் பகவான் 2 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாக்பாட் அடிக்கும்.
விருச்சிகம் - குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வந்துள்ளார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். வாழ்க்கை தலைகீழாக மாறி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். குரு பார்வையால் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்து சேர்க்கை இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உத்யோகம், தொழிலில் அற்புதமான ஏற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு - உங்களின் நான்காம் இடத்திற்குரிய குரு பகவான் உச்சம் பெறுகிறார். உத்யோகத்தில் சிறப்பான பதவி உயர்வு கிடைக்கும். வீடு, நிலம், கார் வாங்குவீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். கடன் சுமை குறையும். தைரியம், தன்னம்பிக்கையால் உத்யோகம், தொழிலில் சாதனை படைப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும்.
மகரம் - குரு பகவான் ஏழாம் இடத்தில் உச்சம் பெற்றுள்ளதால் காதல் உறவில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் அந்யோநியம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் இணைவார்கள். வெளிநாட்டு யோகம் கிடைக்க பெறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகிறார். பண வரவு பெருகி, கடன் சுமை குறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ரத்த பந்த உறவுகளுடன் இணக்கம் அதிகமாகும்.
கும்பம் - குரு பகவான் ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால் பண வரவு நன்றாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி அந்யோநியம் அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் மாற்றம் ஏற்படும். உங்கள் தகுதி திறமைக்கேற்ற உத்யோகம் கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உத்யோகம், தொழிலுக்காக புதிய விஷயங்ளை கற்றுக் கொள்வீர்கள்.
மீனம் - குரு பகவான் ஐந்தாம் இடமான, உங்கள் யோகாதிபதி வீட்டில் உச்சம் பெறுகிறார். தொழிலில் சாதனை படைப்பீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பண வரவு திருப்தியாக இருக்கும். நிலம், வீடு வாங்குவீர்கள். பழைய வழக்குகள், வம்பு ஆகியவற்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தோல், மலக்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடல் கடந்து உங்கள் பெருமை சென்று சேரும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications