தீபாவளி சிறப்பு பலன்: கன்னி ராசிக்கு கோடிகளில் புரளும் யோகம்.. தொட்டதெல்லாம் துலங்கும்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் கன்னி ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

தீபாவளி பலன்கள்
ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் கன்னி ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2க்குரிய சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வாழ்க்கையில் ஒரு மனிதனுடைய மிகப்பெரிய தைரியம் என்பது பணம். அந்தப் பணத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். அதிர்ஷ்டத்தால் பணம் வரும் யோகம் உண்டு. வருமானம் வரக்கூடிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும் சூழல் உண்டாகும்.
பண வரவு
12க்குரிய சூரியன் நீசமாக இருக்கிறார். விரயத்தை தரக்கூடியவர் நீசமாக இருப்பதால் உடலில் நோய்கள் இல்லாமல் போகும். இதயம், மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக நோயுடன் இருப்பவர்களுக்கு குணமாகும் காலகட்டமாக இருக்கும். புதன் பகவான் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால் தொழிலில் நல்ல பண வரவு உண்டாகும்.
தொழில்
10க்கு உரியவர் 2 ஆம் இடத்தில் சம்பந்தப்படுவதால் 200 சதவீத லாபம் உண்டாகும். வேலை வேலை என பிஸியாக இருக்கத் தொடங்குவீர்கள். உங்களுடைய இலக்கை நோக்கி திட்டமிட்டி சென்றால் அற்புதமான யோகத்தையும், வளரச்சியையும் பெறுவீர்கள். மற்றவர்கள் பேசுவதற்கு செவிசாய்க்காமல் உங்கள் வேலை, தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
தொட்டது துலங்கும்
உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அற்புதமான நேரமாக இருப்பதால் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டு. தடைபட்ட காரியங்கள் எல்லாம் நன்றாக நடக்கத் தொடங்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications