Diwali Rasi Palan: குரு மங்கள யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு குட் பை

Subscribe to Oneindia Tamil

தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் மகர ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

Magaram Diwali lucky zodiac signs

தீபாவளி பலன்கள்

ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் மகர ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2க்கு உரிய சனி பகவான் நவம்பர் 28 ஆம் தேதி வக்கிரமடைகிறார். 12, 3க்கு உரிய குரு பகவான் 7 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். உச்சம் பெற்ற குரு பகவானால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். இல்லற வாழ்க்கையில் இன்பங்கள் ஏற்படும். புதிய பார்ட்னர்ஷிப் கிடைக்கும். நிம்மதியான மன வாழ்க்கை ஏற்படும். வீட்டில் நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படும்.

குடும்பம்

மனைவிக்காக நேரம் செலவிடுவது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, மனைவிக்கு வேண்டியவற்றை செய்து மகிழ்வீர்கள். இல்லற சுகம், தாம்பத்ய வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். 3 ஆம் இடத்தில் சனி பகவான் வக்கிரம் பெறுகிறார். குரு 11 ஆம் இடத்தைப் பார்க்கிறார். 11 ஆம் இடம் என்பது உங்களின் பாதகாதியபதியான செவ்வாயின் வீடு.

குருமங்கள யோகம்

செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாயை குரு பார்ப்பதால் குரு மங்கள யோகம் ஏற்படும். செவ்வாய் பகவானை குரு பார்த்த பின்னர், உங்கள் ராசியைப் பார்க்கிறார். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பழைய வழக்குகள் வெளிவரும். வம்பு, வழக்கு பிரச்சனைகள் அனைத்து வந்தாலும் குருவின் பார்வை இருப்பதால் அதில் இருந்து எல்லாம் விடுதலை பெறுவீர்கள்.

அரசு உதவிகள்

பாதகாதிபதி செவ்வாய் தன் வலிமையை இழப்பதால் நன்மையைப் பெறுவீர்கள். 9க்கு உடைய சூரியன் செவ்வாய் வீட்டில் இருப்பதால் ஒரு வகையில் நன்மையையும், ஒரு வகையில் தீமையையும் அனுபவிப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்கும். அரசுப் பணி, அரசின் ஆதரவு கிடைக்கும். அதேநேரம் ஆயுளுக்கு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வண்டியில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

கவனம்

ஆயுளுக்கு ஆபத்து தரும் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. உயிருக்கு ஆபத்தை தரும் விளையாட்டுகளைத் தவிர்க்க வேண்டும். 5க்கு உடையவர் சுக்கிர பகவான் உங்களுக்கு யோகாதிபதி. சுக்கிரன் 10 ஆம் இடத்தில் ஆட்சி பெறுகிறார். 7 ஆம் இடத்தில் குரு உச்சமாகிறார். பழைய காதல்கள் ஒன்று சேரும் வாய்ப்புள்ளது. பிரிந்துபோன தம்பதி மீண்டும் இணைவீர்கள்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ஆசைப்பட்ட விஷயங்களைப் படிப்பீர்கள். நல்ல பார்ட்னர்ஷிப்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். முன்னேற்றத்தை தரும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+