தீபாவளி சிறப்பு பலன்: சிம்ம ராசிக்கு அஷ்டமசனியிலும் அடிக்கும் யோகம்.. பிரச்சனை எல்லாம் தீரப்போகுது
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

தீபாவளி பலன்கள்
ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் சிம்ம ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளியாக இருக்கும். இந்த மாதத்தில் ஏராளமான நன்மைகளைப் பெறப் போகிறீர்கள். சுக்கிர பகவான் ஆட்சி பெறப் போகிறார். சுக்கிரன் உங்களுக்கு தொழில்காரகன் என்பதால் தொழிலில் டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். 3, 10க்கு உரியவர் ஆட்சி பெறும்போது அழகு சாதனப் பொருள்கள் வியாபாரம், மேக்கப் ஆர்டிஸ்டுகளுக்கு அற்புதமான நேரமாக இருக்கும்.
நல்ல நேரம்
ஆட்டோமொபைல், ஐடி துறை, பங்குச் சந்தை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். ராசிநாதன் நீச்சம் பெற்றுள்ளதால் பட்டாசு வெடிக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். உடலில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மூளை, இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. 2க்கு உரியவர் 3 ஆம் இடத்தில் இருக்கிறார்.
தொழில்
சுக்கிரனுடன், சூரியனுடன் புதன் சேர்ந்து பொன்னான பலன்களைத் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சியைப் பெறுவீர்கள். 4 ஆம் இடத்தில் செவ்வாய் வருவதால் நிறைய கெடுதல்கள் ஏற்படும். முரட்டுத்தனமான எண்ணங்கள், குணங்கள் ஏற்படும். நற்பெயர் கெடுவது போன்ற செயல்கள் ஏற்படும். தேவையே இல்லாமல் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது.
பெயர் கெடும் வாய்ப்பு
4 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் வரும்போது தவறே செய்யாமல் பெயர் கெடும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அரசுப் பணிகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வீடு, நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். செவ்வாயை குரு பகவான் பார்ப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகும். இந்த யோகத்தை தொடர்ந்து குருவின் பார்வை 5 ஆம் இடத்தில் படும்போது, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கடன்கள் தீரும்
6 ஆம் இடத்தை குரு பார்க்கவுள்ளதால் கடன்கள் அனைத்தும் நீங்கும். வியாதிகள் எல்லாமே குணமாகும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தீபாவளியன்று 8 ஆம் இடத்தை குரு பார்க்கும்போது அஷ்டமசனி விலகும். இஷ்டப்பட்டதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். 12 ஆம் இடத்தில் இருக்கும் குரு 12, 4, 6, 9 ஆம் இடத்தைப் பார்க்கிறார்.
மங்களசனி
9 ஆம் இடத்தில் இருக்கும் சனியை குரு பார்க்கும்போது வக்கிர சனி மங்களச் சனியாக மாறும். அஷ்டமசனியின் பாதிப்புகளில் இருந்து மீளும் யோகம் உண்டாகும். புதிய முயற்சிகள், புதிய சிந்தனைகள் உருவாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேறும் வகையில் புதிய புதிய உத்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். ஏற்றம் மிகுந்த நேரமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications