சூரியன் - குருவின் கேந்திர யோகம்.. பணக்காரராக வாழப்போகும் ராசியினர்.. இனி உங்களை அசைக்க முடியாது
Kendra yogam 2025: சூரியன் கிரகமும், குரு பகவானும் மார்ச் 2 ஆம் தேதி குறிப்பிட்ட இடைவெளியில் இருப்பதால் கேந்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசியினர் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிப்பார்கள். எந்தெந்த ராசியினர் பலன் பெறுவார்கள் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தையும், இடத்தையும் மாற்றுகின்றன. கிரகங்களின் இயக்க மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியால் உருவாகும் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படும். இந்த கிரக மாற்றங்கள் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும்.

சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக உள்ளார். சூரியன் கிரகம் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் தனது ராசியை மாற்றுகிறார். மார்ச் 2 ஆம் தேதி இரவு 9:45 மணிக்கு, சூரியனும் குருவும் 90 டிகிரி இடைவெளியில் இருப்பதால் கேந்திர யோகம் உருவாகிறது. இரு கிரகங்கள் 90 டிகிரி இடைவெளியில் இருக்கும்போது கேந்திர யோகம் உருவாகும். அதேபோல, நான்காம் மற்றும் பத்தாம் வீடுகளில் இரு கிரகங்கள் இருக்கும்போதும் கேந்திர யோகம் ஏற்படுகிறது.
இந்த கேந்திர யோகம் நிகழும்போது சனியும் சூரியனும் கும்ப ராசியில் இருப்பார்கள். அப்போது, குரு கிரகம் ரிஷப ராசியில் இருக்கும். அந்த வகையில், கேந்திர யோகம் எந்தெந்த ராசியினருக்கு யோக பலன்களைத் தரும் என்று தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி - குரு சூரியனின் கேந்திர யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு புதுவித நம்பிக்கை பிறக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் மற்றும் தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வேலையில் எதிர்பார்த்து வந்த மாற்றங்கள் நிகழும், புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீண்டநாள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் காலமாக இருக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். முதலீடு மூலமாக நல்ல லாபத்தைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.
மிதுன ராசி - மிதுன ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. பிள்ளைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தொழில் துறையில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை சிறப்பாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய வியாபாரம், தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் உருவாகும். கணவன், மனைவிக்கிடையே நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள்.
ரிஷப ராசி - சூரியன் குருவின் கேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்புக்கேற்ற பலனையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரம், தொழிலில் புதிய புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். அதன் மூலம் வெற்றியையும் பெறுவீர்கள். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான காலமாக இருக்கும். வாழ்க்கையில் நீண்டகாலமாக இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பீர்கள்.












Click it and Unblock the Notifications