அந்தாளு.. எடப்பாடி குறித்து ஒருமையில் விமர்சித்த அமைச்சர் நேரு – சட்டென சுதாரித்து கொடுத்த விளக்கம்
திருச்சி: தமிழ்நாடு அரசியல் களம் 2026 தேர்தலுக்காக தயாராகி வருகிறது. திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை, அரசு திட்டங்கள் முகாம், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு செல்போன், வாட்ச் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி வருகிறது. அதிமுக சார்பில் அந்தக் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது திமுகவை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். அமைச்சர் நேருவிடம் செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, சட்டென்று எடப்பாடியை ஒருமையில் விமர்சித்தவர், பிறகு சுதாரித்து அளித்த விளக்கம் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, "உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மருத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மக்களுக்கு இந்த முகாமில் வைத்தே 100 பேருக்கு அவர்கள் கேட்டவற்றை கொடுத்துவிட்டோம். இதற்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது." என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், "கடந்த 4 வருடங்களாக எதுவும் செய்யாமல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சம்பிரதாயத்துக்காக செய்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நேரு, "அந்த ஆளு 4 வருசமா வெளிய போனாரா. இப்போதுதானே அவர் வந்திருக்கிறார்." என்றவர்.
பிறகு சுதாரித்துக் கொண்டு, "அவர் எதிர்க்கட்சி தலைவரை அந்த ஆளு என்று சொல்ல கூடாது. ஆனாலும் அவர் கடந்த 4 வருடங்களாக வெளியே வரவில்லை. இப்போது எதற்காக வெளியில் வந்துள்ளாராம். 4 வருடங்களும் இதுபோல வெளியில் வந்து மக்களை சந்திக்கலாம் தானே. நாங்கள் தான் தேர்தலுக்காக வருகிறோம் என்கிறார். அவர் ஏன் வரவில்லையாம்.
ஒரு ஆட்சிக்கு 5 வருட காலம் இருக்கிறது. அதில் 2 வருடங்கள் கொரோனாவில் போய்விட்டது. அதனுடன் மற்ற வேலைகளையும் பார்த்து இப்போது வந்திருக்கிறோம் தானே. அதை பாராட்டாவிடினும் விமர்சிக்காமல் இருக்கலாமே. மக்கள் குறைகளை சொன்னால் அதை செய்தியாளர்கள் எங்கள் கவனத்துக்கு எடுத்து வாருங்கள்.
மக்கள் ஒருவரும் குறை சொல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவருக்கு பயம் வந்துவிட்டது. உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் மக்கள் நலத்திட்டங்களுக்கான முகாமும், ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் உறுப்பினர் சேர்க்கையும் நடத்துகிறோம். அந்த இரண்டுக்கும் மக்கள் நன்கு வரவேற்கிறார்கள். அதனால் அவருக்கு பயம் வந்துவிட்டது.
கடந்த வருடங்களாக அவர் ஒவ்வொரு நாளும் பொது மக்களிடம் குறைகளை கேட்டு வந்து சொன்னால் நியாயம் உள்ளது. அவரே தேர்தல் நேரத்தில் வெளியில் வந்துவிட்டு எங்கள்ளை கேட்பது நியாயமா. தென் மாநிலங்கள், மகாராஷ்டிரா எல்லாம் இரு மொழி கொள்கை என்ற நிலையில் உறுதியாக உள்ளனர்." என்றார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications