Kumbam Rasi Palan: கும்ப ராசி வாழ்க்கையில் குட்டையை குழப்ப போகும் கிரகங்கள்.. பேராபத்து காத்திருக்கு
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் மாறும். எல்லா கிரகங்களும் ராசியில் அமரப் போகின்றன. ஏற்கனவே ராசியில் ராகு இருக்கிறார். 9, 4க்கு உடைய சுக்கிரனும் அங்கு வந்து இணையப் போகிறார். இது குடும்பத்தில் பெரிய பிரச்சனைகளைக் கொடுக்கும். தேவையில்லாத அவப்பெயர்கள் உண்டாகும்.
யோகங்கள் கொட்டும்
குடும்பம் எனும் கட்டமைப்பு கலையக் கூடிய சூழல் ஏற்படும். வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் எண்ணத்தை சிதறச் செய்யக்கூடிய எந்த செயல்களையும் செய்யாமல் இருப்பது நன்மையைத் தரும். ராகுவை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். ராகு என்பவர் அசுர பலத்தைக் கொடுக்கக் கூடியவர். அதனால், இந்த காலகட்டத்தை உங்கள் உழைப்பில் பயன்படுத்தினால் அற்புதமான யோகங்களைப் பெறுவீர்கள்.
குழந்தை பாக்கியம்
யோகாதிபதி புதன் உடம்பில் உட்கார்ந்திருக்கிறார். உடன் 7க்கு உரிய சூரியனும் அமர்ந்திருக்கிறார். ஏற்கனவே ராகு, பாதாகதிபதி சூரியன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். பார்னர்ஷிப் தொடர்பான விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். யோகாதிபதி உடம்பில் அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்குரிய காலகட்டமாக இருக்கும்.
பெண்களிடம் கவனம்
மனைவி, மனைவியுடைய உறவினர்களுடன் பழகும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குறிப்பாக, பெண்களிடம் அதிக கவனம் தேவை. இல்லையெனில் குடும்பத்திற்குள் தேவையில்லாத பிரச்சனைகள், பாதிப்புகள் வருவதற்கான சூழல் ஏற்படும். பிப்ரவரி 14 ஆம் தேதி செவ்வாய் வரப் போகிறார். சூரியனுடன் சேர்ந்து செவ்வாயும் 21 ஆம் தேதி முழுமையாக வந்தடைவார்.
பண விஷயத்தில் கவனம்
செவ்வாய் வந்த பின்னர் உங்களுக்கு எல்லா தோஷமும் சரியாகும். பண விஷயத்தில் தொடர்ந்து முனைப்பு காட்டுவது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். தேவைக்கு மட்டும் பணத்தை செலவிடுவது நன்மை பயக்கும். ஆடம்பரம், போகங்களுக்கு செலவு செய்யாமல் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. எதை வாங்க வேண்டும், வாங்கக் கூடாது என்று தெரிந்து செலவு செய்வது நல்லது.
வெளிநாடு யோகம்
சுக்கிரன் பாதாகதிபதியானவர் குடும்பத்தை கெடுக்கக் கூடியவர். ராகுவும் குடும்பத்தைக் கெடுக்கக் கூடியவர் என்பதால் குடும்ப விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பரத்துக்காக கடல் தாண்டி செல்கிற யோகத்தை சுக்கிரனும், புதனும், சூரியனும் கொடுக்கப் போகின்றன. வெளிநாடு செல்வது உங்களுக்கு யோகத்தைக் கொடுக்கும். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்குமா ஜாக்பாட்?.. குருவின் அருள் கிடைக்குமா? -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications