Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. புது வீடு, நிலம், இடம் வாங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

february-month-palan-what-kind-of-benefits-will-get-thulam-rasi-people-during-this-period

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் ஏராளமான யோகங்கள் வரப் போகின்றன. அனைத்து கிரகங்களும் 5 ஆம் இடத்திற்குச் செல்கின்றன. ஏற்கனவே 9 ஆம் வீட்டில் குரு, 5 ஆம் வீட்டில் ஏராளமான கிரகங்கள் இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் 5 ஆம் இடத்திற்குச் செல்கிறார். அங்கு ராகுவோடு சம்பந்தப்படுவதால் விபரீதமான நற்பலன்கள் கிடைக்கும்.

பயணங்கள்

உணவு விடுதி, மனமகிழ் மன்றம், தியேட்டர், ஷாப்பிங் மால் வைத்திருப்பவர்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, ஆடம்பரமான விஷயங்கள் அனைத்தும் நடக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். விமானத்தில் பறக்கக்கூடிய யோகம் கட்டாயம் உண்டு. பயணங்களை மேற்கொண்டே இருப்பீர்கள்.

பதவி உயர்வு

என்ன தொழில் செய்கிறீர்களோ அதைப் பற்றிய சிந்தனைகளை மட்டுமே வைத்திருப்பது நல்லது. மன மகிழ்ச்சியோடு இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். சூரியன் 4 இல் இருந்து 5 ஆம் இடத்துக்குச் செல்கிறார். 4 ஆம் இடத்தில் சூரியன் இருக்கும்போது நற்பெயர், பதவி உயர்வு தடைபட்டிருக்கும். இப்போது 5 ஆம் இடத்திற்கு சூரியன் வருவதால் சொத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

குழந்தை பாக்கியம்

சொத்தை அடமானம் வைப்பது, விற்பனை செய்வது, நகை, வீட்டை அடகு வைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 4 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் பிப்ரவரி 14 ஆம் தேதி 5 ஆம் இடத்துக்குச் செல்வதால் நல்ல குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். புதிய சிந்தனைகள் உருவாகும்.

புதிய வீடு

ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் உண்டாகும். புதிய வீடு, இடம், நிலம், தோட்டம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். மனதை குழப்பிக் கொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி செயல்படுத்துவது நல்லது. பொழுதுபோக்கு சாதனங்களில் இருந்து விடுபட வேண்டும். வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+