பிப்ரவரியில் கன்னி ராசிக்காரர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் சுக்கிரன்.. இதுல மட்டும் எச்சரிக்கையா இருங்க
பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பலரும் இந்த மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் கன்னி ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகரம் ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்பம் ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீனம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவர் 13 ஆம் தேதி கும்பம் ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

குரு பகவான் ரிஷபம் ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீனம் ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகு மீனத்திலும் உள்ளனர். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன.
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தின் கிரகங்களின் நிலையைப் பார்த்தால், கன்னி ராசியில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார். ராசிக்கு அதிபதியான புதன் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து மாதம் தொடங்குகிறது. உங்களுடைய குடும்பத்தில் பண லாபம் நன்றாக இருக்கும். சுப காரிய செய்திகள் வந்து சேரும். ஆனால், மனதுக்குள் ஏதோ ஒரு குறை, தடை இருந்துகொண்டே இருக்கும். இதற்கு காரணம் ராசியில் உள்ள கேது. உங்களுடைய மனதை குடும்பத்தார் புரிந்துகொள்ளாத சூழலை உருவாக்கும்.
தொழில் செய்பவர்களுக்கு தொழில் கூட்டாளியின் செயலை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியை புரிந்துகொள்ளாத சூழல் இருக்கும். செவ்வாய் பத்தாம் இடத்தில் வக்கிரமாக இருப்பதால் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் அதற்கான கடிதம் கிடைக்காது. இதுபோன்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள்.
இளைய சோகதரருடன் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் கருத்து மாறுபாடு, பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். மனப்போராட்டம் உண்டாகும். பயணத்தின்போது கூடுதல் கவனம், பாதுகாப்புடன் இருப்பது நல்லது. இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. நீங்களே வாகனத்தை ஓட்டும்போது பாதுகாப்பாக செல்லுங்கள்.
அலுவலகம், குடும்பம், குடியிருக்கும் இடம் போன்ற இடங்களில் மாறுபாடுடைய கருத்துகள் இல்லாமல் இருப்பது நல்லது. புதன் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பது சில அனுக்கிரகங்களைப் பெற்றுத் தரும். பெருமாள் கோயில்களில் நெய் தீபம் போட்டு வழிபடுவது உங்களுக்கு வரும் தடைகளை நீக்கும். வியாபாரத்தில் வளர்ச்சியைக் கொடுக்கும். பிப்ரவரி 4 ஆம் தேதி 6 ஆம் ஸ்தானத்தில் அமருவதால் உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது.
வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும். இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பிப்ரவரி 4 முதல் 26 ஆம் தேதி வரை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தன ஸ்தானாதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஏழாம் இடத்தில் உச்சமாக இருப்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் இருக்கக் கூடிய பாதிப்புகள் நீங்கும். லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்க கூடியவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.
சுக்கிரன் ஏழாம் இடத்தில் பாதக ஸ்தானத்தில் உச்சமாக இருப்பதால் மனைவியோடு கருத்து மாறுபாடுகள் உண்டாகும். நல்ல விஷயங்களுக்கு கூட கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உங்களுக்கு எதிரான சிந்தனைகள் குடும்பத்தில் தோன்றும். கணவரோடு இருக்கக்கூடிய கம்யூனிகேஷனில் கவனமாக இருப்பது நல்லது. ஏற்றுமதி தொழில்செய்பவர்களுக்கு 26 ஆம் தேதிக்குப் பிறகு வெற்றிக்கான சூழல் உருவாகும்.
மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புகள் ஏற்படும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். குரு பகவானுடைய பார்வை நன்மையை தரும். ராகவேந்திரர், பாபாவை தரிசிப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications