"கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா".. மகர ராசிக்கு குருப்பெயர்ச்சியில் வரும் அதிர்ஷ்டம்
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், மகர ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது மகர ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம் (Magaram Rasi Palan)
மகரம் ராசியினருக்கு 7 ஆம் இடத்துக்கு குரு பகவான் வருகிறார். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் பாதிப்புகள், கடன் தொந்தரவுகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். இதுவரை இருந்து வந்த பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். காதல் கைகூடும். திருமண யோகம் உண்டாகும். திருமண வரன்கள் கூடி வரும்.
குரு பார்வை
குரு பகவானின் நேரடி 7 ஆம் பார்வை உங்கள் மேல் விழுவதால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும். நல்லவர்களின் தொடர்புகள் கிடைக்கும். நல்ல நண்பர்கள், வழிகாட்டிகள் கிடைப்பார்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என சிலர் நினைப்பார்கள். நீங்கள் வாழ மற்றவர்கள் உதவி செய்வார்கள். நல்ல வேலை கிடைக்கும் யோகம் உண்டு. நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
லாபம்
இந்த ஓராண்டில் செய்யக்கூடிய எல்லா விஷயங்களிலும் லாபம் ஏற்படும். தொழிலில் பெரிய லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கக்கூடிய யோகம் உண்டு. கடின உழைப்புக் கேற்ற பலன் கிடைக்கும். உங்கள் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
பெயர், புகழ்
செய்யக்கூடிய தொழில், நீங்கள் சார்ந்த துறைகளில் நல்ல புகழ் கிடைக்கும். நல்ல பண வசதிகள் கிடைக்கும். பண வரவு, பண வசதி அற்புதமாக இருக்கும். கம்யூனிகேஷன் சிறப்பாக இருக்கும். கன்சல்டிங் துறையில் இருப்பவர்கள், மன நல மருத்துவர்கள் ஆகியோருக்கு நல்ல பெயர், புகழ் கிடைக்கும். பயணங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். மனதில் இருந்த பயம் விலகி நல்ல தைரியம் பிறக்கும்.
தொழில்
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அபரிமிதமான லாபங்கள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். நல்ல பார்ட்னர்கள் கிடைப்பார்கள். தொழிலில் முதலீடு செய்யக்கூடிய வகையில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். குருவின் 7 ஆம் பார்வை படுவதால் நல்ல வசதியான, பண்பான, தரமான வரன்கள் அமையும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். புதிய வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பழைய சொத்துகளை விற்கும் யோகம் ஏற்படும். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வாழ்க்கையில் செட்டிலாவது, பிடித்த உத்தியோகம், தொழிலில் செட்டிலாவது, தேவையான படிப்புகளை படிக்கும் யோகம் உண்டாகும். நல்லவர்களின் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். சேலம் ராஜகணபதியை வழிபாடு செய்வது வாழ்க்கையில் அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications