குருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டமா?.. கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், மேஷ ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது மேஷ ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம் (Mesham Rasi Palan)
மேஷம் ராசிக்கு 4 ஆம் இடத்தில் குரு பகவான் அருள்பாலிப்பதால் அற்புதமான காலம் பிறக்கப் போகிறது. சுப ஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெறுவதால் கஷ்டங்கள் எல்லாம் விலகக்கூடிய அமைப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலையை இழந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும்.
சுகபோகம்
வாழ்க்கைக்கான சுகங்களை அதிகப்படுத்திக் கொடுக்கும். மன கஷ்டம், மன குழப்பங்கள் நீங்கும். மனதில் ஒரு தெளிவு ஏற்படும். யாரோடு பழக வேண்டும், யாரோடு பழகக் கூடாது என்கிற தெளிவு ஏற்படும். ஒதுக்கி வைத்த உறவுகளுடன் நெருங்கிப் பழகக்கூடிய சூழல் ஏற்படும். ஆரோக்கியம் ரீதியாக பிரச்சனைகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனை கிடைக்கும்.
வீடு, கார் வாங்கும் யோகம்
படிக்கும் மாணவர்களுக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைப்பார்கள். கல்வியில் உயரக்கூடிய சூழல் ஏற்படும். அற்புதமான வீடு கட்டக்கூடிய யோகமும், சொந்தமாக கார் வாங்கும் யோகமும் உண்டு. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். இதுவரை தூக்கமில்லாமல் தவித்து வந்தவர்களுக்கு நல்ல தூக்கம் வந்து சேரும். நல்ல வேலைகள் அமையும். வருமானம் பெருகும்.
புதிய வேலை
வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிய வேலைகள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த கண்டங்கள், கஷ்டங்கள், அவமானங்கள் எவை இருந்தாலும் அவற்றை குரு பகவான் நிவர்த்தி செய்து தருவார். அடுத்த மாநிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பார்ப்பதால் தொழிலில் இருந்து வந்த அவமானங்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
வழிபாடு
வாழ்க்கையில் இருந்து வந்த எதிரிகள் விலகுவார்கள். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும். உங்கள் குடும்பத்தில் திருமண செய்தி, குழந்தை பாக்கிய செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கக்கூடிய குருப்பெயர்ச்சியாக இருக்கும். எட்டுக்குடி முருகனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். எல்லா நன்மைகளும் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அற்புதமான காலகட்டம்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications