குருப்பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு குருப்பெயர்ச்சியில் மாற்றம் ஏற்படுமா?.. முழு பலன்கள் விவரம்
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், ரிஷப ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது ரிஷப ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசிக்கு இதுவரை தன ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இப்போது தைரிய ஸ்தானத்திற்கு வருகிறார். நல்ல லாபத்தை தரக்கூடியவர் குரு பகவான். இதுவரை இருந்து வந்த பொருளாதார தடைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் பிள்ளைகள் சொல் படி கேட்டு நடக்க ஆரம்பிப்பார்கள். ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருப்பார்கள்.
தன லாபம்
வாழ்க்கையில் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியையும், யோகத்தையும் கொடுக்கும். 3 ஆம் இடத்துக்கு குரு பகவான் வருகிறார். நல்ல தன லாபத்தைக் கொடுக்கக் கூடியவர் குரு பகவான். புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர உறவுகளோடு கருத்து வேறுபாடுகள், மன குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
குரு பார்வை
நீங்கள் சகோதரர்களை மதிக்கவில்லை என்பது போன்ற நிலை ஏற்படும். சகோதரர்கள் பாராமுகமாக இருப்பதாக நீங்கள் இருக்கும் நிலையில், எதுவும் சொல்வதில்லை என்று அவர்கள் நினைக்கும் நிலை உண்டு. குரு பகவானின் அருள் உங்கள் வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். திருமணமாகாத ரிஷப ராசியினரின் 7 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நல்ல முறையில் திருமணம் கூடி வரும்.
வரன் அமையும்
மகன், மகளுக்கு பார்க்கக்கூடிய வரன் அற்புதமாக இருக்கும். பாக்கியம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். வரக்கூடிய கணவன், மனைவி வாழ்க்கையை உயர்த்தக் கூடியவராக இருப்பார். குரு பார்வை இருப்பதால் வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். நல்ல நண்பர்கள் அமையும் வாய்ப்புள்ளது. பிரிந்த கணவன், மனைவி மீண்டும் இணையக்கூடிய யோகம் உண்டாகும்.
யோகம்
நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுக்கு நெருக்கமானவர்கள் வாழ்க்கையில் முன்னேறும் யோகம் உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தெய்வீக திருத்தலங்களுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். வெளிநாட்டில் சென்று உயர்கல்வி படிக்கும் யோகம் உண்டாகும். அப்பாவுக்கு இருந்து வந்த உடல்நலப் பிரச்சனைகள் நிவர்த்தியாகும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
வழிபாடு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். கவுன்சிலிங், கன்ஷல்டிங் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தைரியம், வீரம், பராக்கிரமம் கூடி வரும். விராலிமலை முருகனை வழிபாடு செய்வது உங்களுக்கு அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications