குருப்பெயர்ச்சி பலன் 2026: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. குருவால் வரும் அதிர்ஷ்டம்
Guru Peyarchi 2026: ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. வருடாந்திர கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஜூன் மாதம் 2 ஆம் தேதி துலாம் வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான் மூன்று மாதம் கழித்து துலாம் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் துலாமுக்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும் முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்த குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.
இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப்போகும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு குருப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். இதுவரை 9 ஆம் இடத்தில் இருந்து வந்த குரு 10 ஆம் இடத்தில் அமர்கிறது. 10 இல் குரு அமர்வது பதவியை பறிக்கும் என்பர். அச்சப்படத் தேவையில்லை. பதவியைப் பறித்தாலும் பெரிய பதவி கிடைக்கும் யோகம் உண்டாகும். பதவி உயர்வுகள் கிடைக்கும். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்த பதவிக்குச் செல்லும் யோகம் உண்டாகும்.
பதவி உயர்வு
10 இல் உள்ள உச்ச குரு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு கேதுவுடன் சேர்ந்திருக்கும் குரு பகவானால் கேள யோகம் ஏற்பகிறது. இந்த ஓராண்டில் உங்கள் பதவியை இரட்டிப்பாக்கும் அற்புதமான பதவி உயர்வுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக கோச்சார ரீதியாக துலாம் ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. சிலருக்கு 6, 8 திசைகள் நடந்து கொண்டிருப்பதால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தொழில் ரீதியான நல்லவை நடக்கும்.
தொழில்
மஞ்சள் நிறமுள்ள தொழில் அமைப்புகளோடு தொடர்புள்ளவர்கள் ஜூவல்லரி வியாபாரம் செய்வர்கள், பித்தளை கடை வைத்திருப்பவர்கள், கோவில் பொருள்கள், ஆன்மீகப் பொருள்கள், விவசாயப் பெருமக்கள், வியாபாரிகளுக்கு மிகப்பெரிய தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். துலாம் ராசியினருக்கு பெரிய கஷ்டங்கள் பாதிப்புகள் எதுவும் இருக்காது.
ஆரோக்கியம்
சனி பகவான் ஏற்கனவே 6 ஆம் இடத்தில் இருந்து கொண்டு கடன் சார்ந்த விஷயங்களில் கவலைகலைப் போக்குவார். குறைந்தபட்சமாக வருமானம் உயர்ந்திருக்கும். எதிரிகள் நண்பராகும் காலகட்டமாக இருக்கும். எதிரிகளிடமிருந்து விலகியிருப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். சரியான மருத்துவம், மருந்துகள் கிடைக்கும் யோகம் உண்டு.
குரு பார்வை
6 ஆம் இடத்தில் இருக்கும் சனியை உச்ச குரு பார்ப்பதால் தொழில், வேலை நன்றாக இருக்கும். எதிர்ப்புகள் விலகக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. கணவனால் இருந்து வந்த கவலைகள் பெண்களுக்கு நீங்கும் காலகட்டமாக இருக்கும். குழந்தைகள் சார்ந்த விஷயத்தில் நல்லவை நடக்கும் யோகமான காலகட்டமாக இருக்கும்.
வீடு வாங்கும் யோகம்
வீடு, வாகனம் சார்ந்த விஷயங்களில் நல்லவை நடக்கும். அம்மாவை கவனிக்க முடியவில்லை, உடல்நிலைப் பற்றிய கவலைகள் எல்லாம் தீரும். 2 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications