குருப்பெயர்ச்சி 2025: மூலம் நட்சத்திரத்தினருக்கு அடிச்சது ஜாக்பாட்.. பண மழை கொட்டப் போகுது
குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியால் மூலம் நட்சத்திரக்காரர்கள் ராஜயோகம் பெறப் போகின்றனர். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணப் போகிறார்கள். இந்த குருப்பெயர்ச்சியில் மூலம் நட்சத்திரத்தினர் என்னென்ன விதமான நற்பலன்களை அனுபவிப்பார்கள். எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. மிருகசீரிஷம் 2 ஆம் பாதத்தில் இருந்து புதன் வீடான மிதுனத்தின் வீட்டில் மிருகசீஷம் 3 ஆம் பாதத்துக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அன்று முதல் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வரை மிதுன ராசியில் இருக்கப் போகிறார். அதிசாரமாக அக்டோபர் மாதத்தில் மிதுனத்தில் இருந்து இறங்கி கடகத்துக்கு மீண்டும் வருகிறார்.

பிறகு, அங்கு வக்கிரமாகி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மீண்டும் மிதுனத்தை நோக்கி தன்னுடைய பெயர்ச்சியை ஆரம்பிக்கிறார். மீண்டும் கடகத்துக்கு வருவார். இந்த குருப்பெயர்ச்சியினால் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தன்னுடைய முன்னேற்றத்தால் மற்றவர்களை வியக்க வைக்கக்கூடியவர்கள் மூலம் நட்சத்திரக்காரர்கள். மூலம் என்பது ஆஞ்சநேயருடைய நட்சத்திரம், கேதுவின் ஆளுமை பொருந்திய நட்சத்திரம். சுயம்பு போல தன்னைத் தானே செதுக்கி உருவானவர்களாக இருப்பார்கள். முதன்மையானவர்களா இருப்பார்கள். மூலம் நட்சத்திரக்காரர்கலுக்கு தலைக்கு மேல் குருவின் பார்வை உள்ளது.
3 ஆம் இடத்திற்கு குருவின் பார்வை அமைகிறது. அமோகமான காலகட்டமாக இருக்கும். லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ குரு பார்வை கிடைக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு தன் வீட்டை தானே பார்ப்பதால் மூலம் நட்சத்திரக்காரர்களின் ஞானம் அதிகரிக்கும். வருமானம் பெருகப் போகிறது. பணம் விஷயங்களில் அபரிமிதமான வளங்களைக் கொடுக்கப் போகிறார்.
சுய கெளரவத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படும். ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக குருமார்களின் ஆசிகள் கிடைக்கும். மூலம் நட்சத்திரக்காரர்களின் தொழில் சிறப்பாக அமையும்.
பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உண்டாகும். ஆன்மீக சுற்றுலாவுக்குச் செல்வீர்கள். குருப்பெயர்ச்சிக்குப் பின்னர் கோவில் சார்ந்த அமைப்புகள் உண்டாகும். முயற்சி ஸ்தானங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ராகுவுடைய பெயர்ச்சியும் ஜூன் மாதத்தில் வலுவாக இருக்கும். பிரம்மாண்டமான காலகட்டமாக இருக்கும். சிறு முயற்சி போட்டாலும் அதில் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். உங்களுடைய பெயர், புகழ், சந்தோஷம் கிடைக்கும்.
இளைய சகோதரியால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். இதுவரை நீங்கள் முயற்சி செய்கிற விஷயத்தில் நிச்சயமாக வெற்றி காண்பீர்கள். குரு பார்வை இருக்கும்போது செய்யும் முயற்சிகளில் நிச்சயம் முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். அரசு, அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். தந்தையாகும் வாய்ப்பு உண்டாகும். திருமண யோகம் உண்டாகும்.
குருவின் 7 ஆம் பார்வை விழுவதால் நல்ல அமைப்பாக இருக்கும். பிரிந்த சொந்தங்கள் கூடும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை உயரும். அதற்கான பாக்கியங்கள் உண்டாகும். 1, 3, 9 ஆம் இடம் இயங்குவதால் உங்களுக்கான மதிப்பை, அங்கீகாரத்தை உருவாக்கும். 3 ஆம் இடம் என்பது கும்பத்தின் வீடு, காலபுருஷனுடைய 16 வீடு. மூலம் நட்சத்திரக்காரர்கள் மீடியா மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். தொட்ட முயற்சிகள் அனைத்திலும் பிரம்மாண்ட வெற்றி அடைவீர்கள்.
நிறைய பாக்கியங்கள் வந்து சேரும். இதுவரை செய்த புண்ணிய பலன்களுக்கான யோகங்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார். உங்கள் மூலமாக அடுத்தவர்களுக்கு அந்த பாக்கியங்கள் சென்று சேரும். தகவல் தொடர்புத் திறன் அமோகமாக இருக்கும். மொத்தத்தில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஒரு வருடம் அமோகமாக இருக்கும்.
பயணங்களால் அலுப்பு ஏற்படும். காலபுருஷனுக்கு 11 ஆம் வீடு மூக்கு, கழுத்து, தொண்டை, தோள், தோள்பட்டை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சுவாசப் பிரச்சனை, சளி, காய்ச்சல் ஏற்படும். சுகாதாரம் இல்லாத இடத்தை தவிர்ப்பது நல்லது. குரு பார்வையில் ராகு இருப்பதால் எந்த தொந்தரவும் இருக்காது. இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சிறு சிறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். மற்றபடி மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு முன்னுக்கு வரும் காலகட்டமாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு செலுத்துவது நல்லது. வடமாலை சாற்றுவது அமோகமான பலன்களைத் தரும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications