கன்னி ராசிக்கு சூப்பர் டைம்.. கூரையை பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. வேலை மாற்றம் உறுதி
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றும். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு 10 ஆம் இடத்துக்குப் போகிறார். இதுநாள் வரை குரு பார்வை உங்களுக்கு இருந்ததால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்திருக்கும். குடும்பத்தில் திருமணம், காது குத்து, குழந்தைப் பேறு போன்ற நல்ல விஷயங்கள் உண்டாகியிருக்கும். குரு பத்தாம் இடத்துக்குப் போவதால் நல்ல பதவி மாற்றம் உண்டாகும்.
இடமாற்றம் நிச்சயம்
புதிய துறை, இடாற்றம் உண்டாகும். அக்கவுண்ட், ஆடிட்டிங், பேக் எண்டு வேலைகளைச் செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். நிதி சார்ந்த துறை உங்கள் கையில் இருக்காது. பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் யோகம் உண்டாகும். பள்ளி, கல்லூரிகளில் பயிற்சிகளை கொடுப்பது, மேன் பவர் எடுப்பது போன்ற வேலைகள் கிடைக்கும்.
ஆலோசனை கொடுப்பதை தவிர்க்கவும்
பெரியவர்களுக்கு, உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை கொடுக்காமல் இருப்பது நல்லது. இருக்கும் வேலையை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பணம் இருக்காதோ, வீட்டை யார் பார்த்துக் கொள்வார்கள் என்பது போன்ற கவலைகள் எல்லாம் வேண்டும். 2, 4, 6 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் பணத்துக்குப் பஞ்சம் இருக்காது.
நகை வாங்கும் யோகம்
கன்னியில் பிறந்தவர்களுக்கு நகை வாங்கும் பிராப்தம் உண்டாகும். சமுதாயத்தில், குடும்பத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். தப்பு கண்டுபிடிக்கக் கூடிய மனப்பான்மையை மாற்றிக் கொள்வது நல்லது. எல்லோரிடமும் சுமூகமாக, இணக்கமாகப் பழகிக் கொள்வது நல்லது.
நிவர்த்தி உண்டாகும்
வாழ்க்கைத் துணைக்கு மறைவுப் பகுதிகளில் இருந்து வந்த பாதிப்புகள், ஆரோக்கியப் பிரச்சனைகள் நிவர்த்தியாகும். 4 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் பிள்ளைகள் பணம் வரக்கூடிய பிராப்தம் உண்டாகும். சம்பாத்தியம் மேம்படும். படிப்பில் இருக்கக்கூடிய பாதிப்புகள் நிவர்த்தியாகும். வேறு ஊருக்குச் சென்று படிக்கக்கூடிய யோகம் கிடைக்கும்.
பண வரவு அதிகரிக்கும்
கன்னி பணம், மரியாதைக்கு பஞ்சமே இருக்காது அமோகமான காலகட்டமாக இருக்கும். பெரிய பெரிய கல்லூரி, கல்வி நிறுவனங்களில் வேலை கிடைக்கும். மெரிட்டில் சீட்டு கிடைக்கும். இருக்கிற வேலையில் இருந்து மாறினாலும், புது வேலைக்குப் போனாலும் தெரிந்த வேலையாக இருக்கும். பணம்,பொருளாதார விஷயங்களில் பெரிய பாதிப்பு ஏற்படாது. நான், நீ என்கிற போட்டி இல்லாமல் வீட்டுக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் அந்நியோன்யத்தை வளர்க்க வேண்டும். கண்டிப்பாக குழந்தைகளை வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள்
மாணவர்களுக்கு 4 ஆம் இடத்தில் குரு இருப்பதால் அருமையான காலகட்டமாக இருக்கும். தனியாக அமர்ந்து படிப்பது நல்லது. பிடித்த துறைகளைத் தேர்ந்தெடுத்து படிக்கும் காலகட்டம்
பெண்கள்
பெண்கள் மாமியாரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பணத்துக்குப் பஞ்சம் இருக்காது. நகைகள் வாங்குவீர்கள். கடன்களை அடைப்பீர்கள். தயாரிப்பு துறை, இன்ஜினியரிங் துறையில் முதலீடு செய்வது நல்லது. தொழில் செய்யும் யோகம் உண்டாகும். ஜாதக தசாபுத்தியின்படி தொழில் தொடங்குவது நல்லது,
வழிபாடு
ஆஞ்சநேயர் வழிபாடு, வியாழக்கிழமை தோறும் அபிஷேகம் செய்வது தொழில் ஸ்தானத்தை அபிவிருத்தியாக்கும். அமோகமான காலகட்டமாக இருக்கும்.
மதிப்பெண்
சந்தோஷ ரீதியாக 75 சதவீதமும், பொருளாதார ரீதியாக 80 சதவீதமும் அருமையான நன்மைகளைப் பயக்கும்.












Click it and Unblock the Notifications