கும்ப ராசிக்கு தொழில், வியாபாரம் தொடங்க சூப்பர் நேரம்.. தொட்டதெல்லாம் வெற்றி, அதிர்ஷ்டம்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றும். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். ராசி லக்கினத்தில் ராகு வருவதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொட்டும். பண வரவு அபரிமிதமாக அதிகரிக்கும். இன்னோவேட்டிவாக மாறக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேலையை விட்டு தனி தொழில், நிறுவனம் அமைப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
யாரிடம் நண்பனாக இணங்கி பாசமாக இருந்தீர்களோ அந்த நிலை மாறி நான் சொல்வதைக் கேள் என்று மாறுவீர்கள். உங்கள் எண்ணமே மாறும். குரு பார்வை ராகு மீது இருப்பதால் இறங்கி விளையாடும் காலமாக இருக்கும். லக்கினத்துக்கு அருமையான பலம் கிடைக்கப் போகிறது. மரண பயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும், குரு பார்வை இருப்பதால் அந்த பயமே தேவையில்லை.
தொழில் தொடங்கும் யோகம்
தொழில் தொடங்கினால் சமாளிக்க முடியாதோ, தோற்றுவிடுவோமோ என்ற எண்ணமே வேண்டாம். தாராளமாக தொழிலை தொடங்கலாம். கண்டிப்பாக வெற்றி அடையும் யோகம் உண்டாகும். தனியாக செய்யக்கூடிய தொழில்கள் அனைத்தும் கண்டிப்பாக வெற்றியைக் கொடுக்கும். கும்பத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் இனி தனித்து முடிவெடுக்கத் தொடங்குவீர்கள். 90 சதவீதம் பேருக்கு 2025 இல் கண்டிப்பாக காதல் திருமணம் உண்டாகும். ஆண் குழந்தை அறிவாளியாகப் பிறப்பார்கள்.
குரு பார்க்க கோடி நன்மை
பஞ்சம ஸ்தானத்தில் குரு இருப்பதால் வீடு முழுக்க குழந்தைகள், கலகலப்பாக இருப்பார்கள். உடம்பு கட்டுக்கோப்பாக மாறும். வீட்டில் இருக்கும் மூத்த பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வயிறு தொடர்பான உபாதை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குரு பார்வை பலம் பாக்கிய ஸ்தானத்துக்கு விழுவதால் அப்பா, அம்மாவுடன் உறவு வலுவடையும். கும்ப ராசியினர் ஜெயிப்பது உறுதி. தர்மம், அறம், நெறி தவறாமல் இருப்பது அமோகமான பலன்களைக் கொடுக்கும்
எடுத்த காரியங்களில் வெற்றி வெற்றி என்று பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு போகும் உண்டாகும். பெரிய பெரிய விஷயங்களை செய்து முடிப்பீர்கள். ஜாவா சுந்தரேஷன் போல பத்து மடங்கு முன்னேற்றம் உண்டாகும். சந்தோஷமான காலகட்டமாக இருக்கும்.
கவனம்
சளி தொந்தரவுகளால் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. வெளி உணவுகள், இரவு நேர உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள்
மாணவர்கள் புதிய படிப்புகளை எடுத்து படிக்க ஆரம்பிப்பார்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய பெரிய கல்லூரிகள், வெளியூர் சென்று படிப்பது, அல்லோபதி, சாட்டிலைட் துறை படிப்பு போன்றவை அமோகமாக இருக்கும்.
பெண்கள்
பெண்களைப் பொருத்தவரை இனி முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலனைப் பெறுவீர்கள். பத்து வருடங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் பெறுவீர்கள். உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். அகல கால் வைத்து தொழில், வியாபாரத்தை தொடங்கலாம்.
வழிபாடு
ஜீவசமாதிகளுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது, முடிந்த உதவிகளைச் செய்வது அருமையான பலன்களைத் தரும். சுவாமிகள் வழிபாடு, சந்நியாசிகள் வழிபாடு, மகான்கள் வழிபாடு கண்டிப்பாக பெரிய ஏற்றத்தை தரும்.
மதிப்பெண்
சந்தோஷம், பொருளாதார ரீதியாக 85 சதவீதம் அருமையான காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications