குரு பெயர்ச்சி பலன் 2023: தனித்த குரு தோஷமா? யோகமா? யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைக்கும்?
சென்னை: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். 2024ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் குரு பகவான் மேஷ ராசியில்தான் பயணம் செய்வார். செப்டம்பர் மாதம் வக்ரமடையும் குரு பகவான் நவம்பரில் இருந்து தனித்த குருவாக பயணம் செய்வார். குரு பகவானின் இந்த பயணங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் தரும் யோகம்: குரு பகவான் பொன்னவன், மனிதர்களின் கல்வி, வேலை, திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை நல்ல முறையில் கிடைக்க குருபகவானின் அருள் அவசியம். எனவேதான் நவகிரகங்களில் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் சில மாதங்கள் அதிசாரமாகவும் சில மாதங்கள் வக்ரகதியிலும் செல்வார் குருபகவான். செப்டம்பர் மாதம் முதல் வக்ரகதியில் செல்லும் குரு பகவான் டிசம்பர் வரை வக்ரநிலையிலேயே பயணம் செய்வார்.

மேஷம்: குரு ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு இப்போது ராகு உடன் பயணம் செய்கிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்பது போல 30 வயதுக்கு உட்பவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வரும். ஒருவரையொருவர் அனுசரித்து விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சொந்த முதலீடுகள் வேண்டாம். ராகுவிடம் இருந்து விலகி குரு பகவான் தனித்த குருவாக பயணம் செய்யும் போது, தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும்.
மிதுனம்: குரு பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கடகம்: குரு பகவான் இப்போது பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். வேலையில் இட மாற்றம் நிகழும். மாற்றம் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நவம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு வேலை தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
சிம்மம்: குரு உங்க ராசிக்கு 5 மற்றும் 8 ஆம் வீட்டிற்கு உடையவர். பாக்ய ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
துலாம்: குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். குரு வக்ரமாக செல்லும் காலங்களில் நன்மையை தரப்போகிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகம் அதிகரிக்கும். உங்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கப்போகிறது.
தனுசு: குரு உங்களுடைய ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1 குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. நவம்பர் மாதம் முதல் உங்களின் எண்ணங்கள் ஈடேரும். நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை எளிதில் செயல்படுத்துவீர்கள். அற்புதமான கால கட்டமாகும்.
மீனம்: குரு 2ஆம் வீட்டில் குடும்ப குருவாக பயணம் செய்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. பண விவகாரங்களில் கவனம் தேவை. பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications