குரு பெயர்ச்சி பலன் 2023: மேஷ ராசியில் பல ஆண்டுகளுக்குப் பின் அற்புத கூட்டணி.. ஜாக்பாட் யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல ஓராண்டுகள் ஆகும். மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு பகவான் 22ஆம் தேதி முதல் மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். 2024ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் மேஷ ராசியில் பயணம் குரு பகவான் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன யோகங்களைத் தரப்போகிறார் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

குரு பகவான் தன்னுடைய 12ஆண்டுகளுக்குப் பிறகு கால புருஷனின் முதல் வீடான மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். குரு பார்க்கும் ராசிகளான சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பார்வை கிடைக்கும். துலாம் ராசியில் இருக்கும் கேது பகவானுக்கும் குருவின் ஒளி கிடைக்கும்.

மேஷம்: உங்களுக்கு ஜென்ம குரு. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு மேஷ ராசியில் செய்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் ராகுவும் குரு பகவானும் இணைவது சிறப்பு. குருவும் ராகுவும் ஜென்ம ராசியில் இணைந்திருப்பது சிறப்பான யோகத்தை தரப்போகிறது.
ரிஷபம்: விரைய குருவினால் நிறைய சுப விரையங்களை தரப்போகிறது. செலவுகளால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்றுவிட்டது என்ற நிலையை ஏற்படுத்தும். உங்கள் எதிரியை பகைத்துக் கொள்ள வேண்டாம். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இறை வழிபாடு செய்யுங்கள். கண்டிப்பாக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு திடீர் யோகத்தை தரக்கூடியதாக அமையும்.
மிதுனம்: லாப ஸ்தான குரு எதிர்பாராத பணவரவினை தரப்போகிறார். குரு பகவானின் பார்வையால் புத்திரபாக்கியம் தைரியம்,எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தடைபட்ட சுப காரியங்கள் அனைத்துமே நடைபெறும். ஷேர் மார்க்கெட் முதலீடு செய்பவர்களுக்கு லாப குரு நிறைய பண வருமானத்தை தரப்போகிறார். மறைமுக தொழில் வருமானம் அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கும் தொழில்கள் அனைதிற்குமே இது ஒரு மகத்தான காலமாகும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
கடகம்: குரு பகவான் கர்ம மற்றும் தொழில் ஸ்தானத்தில் இடப்பெயர்ச்சி அடைவதால் சிறந்த பலன்களை தருவார். வேலை தொழிலில் புரமோசன் நிச்சயம் உண்டு. அஷ்டமத்து சனியால் ஏற்படும் தாக்கங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். வீடு மனை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேவை தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். திடீர் தன லாபங்களும் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
சிம்மம்: குரு பாக்கிய ஸ்தானத்தில் வருவதால் அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. உங்களை பார்த்தும் பார்க்காமல் போனவர்கள் இனி வீடு தேடி வந்து பாராட்டி விட்டு செல்வார்கள். ராசிக்கு குரு பார்வை கிடைப்பது அதி சிறப்பு. லாட்டரியில் திடீர் ஜாக்பாட் நிச்சயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பு உண்டு குருவின் திரு அருளால் நல்ல வேலையும் கிடைக்கும்.

கன்னி: அஷ்டமத்தில் குரு வந்தாலும்,ஆபத்து ஒன்றுமில்லை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள் பண வருமானம் வரப்போகிறது. செலவுகளும் வரிசைகட்டி நிற்கும் சுப செலவுகளாக மாற்றுங்கள். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குங்கள் நிச்சயம் நன்மைகள் நடைபெறும்.
துலாம்: களத்திர ஸ்தானத்தில் கல்யாண குருவாக வருவதால் திருமணம், வேலையில் புரமோசன், குழந்தைப்பேறு கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் சுப பலன்கள் உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக சனி பார்வை பெற்றும் ஆறு மாத காலமாக ராகு-கேதுவின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை சிறந்த ஆறுதலாக இருக்கும். மன குழப்பத்தை போக்கும்.
விருச்சிகம்: ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் வருவதால் எவ்வளவு கெடுபலன்களை குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வார். உடல் ஆரோக்கியம் நலமடையும். தொழிலில் அக்கறை செலுத்துங்கள். பணத்தை அதிக முதலீடு செய்து அகலக்கால் வைக்காதீர்கள். குடும்பத்தில் கவனம் செலுத்தினால், நற்பலன்கள் நிச்சயம்.
தனுசு: உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான புத்திர ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி அடைகிறார், மேலும் ராசிக்கு குரு பார்வையும் கிடைப்பதால் இவர்களுக்கு புத்திர பாக்கியம் திருமண யோகம் தொழில் மேன்மை பாக்கியம் போன்ற மேம்பட்ட சுப பலன்கள் கிடைக்கப்போகிறது. தொட்டது துலங்கப்போகிறது. காரிய வெற்றிகள் உண்டாகப்போகிறது.
மகரம்: சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். பெற்றோர்கள் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். வீடு மனை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொழில் விசயமாக பயணங்கள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்களால் மன நிம்மதியும் சுகமும் அதிகமாக கிடைக்கும். ஏழரை சனியால் சங்கடப்படும் உங்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறார் குரு பகவான்.
கும்பம்: ராசிக்கு மூன்றாம் இடத்தில்,தைரிய ஸ்தானத்தில் குரு பகவான் ராகு உடன் பயணம் செய்வதால் அற்புதமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு லாபங்கள், ஆன்மிக பயணங்கள், கல்யாண யோகங்கள் கைகூடி வரப்போகிறது. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த அனைத்து காரியங்களும் கைகூடி வரப்போகிறது.
மீனம்: தனம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று அமரப்போகிறார். தொழில் செய்பவர்களுக்கு லாபங்களும் உத்தியோகஸ்தர்களுக்கு புரமோஷன்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புது வளர்ச்சிகளும் உண்டாகும். மேலும் வயதானவர்களுக்கு, ஆயுள் பலம் நன்றாக இருக்கும் நோய்கள் நீங்கும். ஏழரை சனியில் விரைய சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இந்த குருப்பெயர்ச்சி குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மிக சிறந்த குரு பெயர்ச்சியாகும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications