விபரீத யோகம்! கன்னி ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. இன்று முதல் எப்படி இருக்கும்?
சென்னை: இன்று முதல் கன்னி ராசிக்காரர்கள் கடந்த 5 வருடமாக பட்ட கஷ்டம் எல்லாம் சரியாக போகிறது. உங்களுக்கு இந்த மே 1ம் தேதி குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பவங்கள் நடந்துள்ளன. குடிசையில் இருப்பவன் கோட்டைக்கு சென்றுவிட்டான் என்று சொல்வார்களே.. அப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சி மூலம் மாறி இருக்கிறது.

மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம்.
5 வருட கஷ்டம்: கன்னி ராசிக்காரர்கள் கடந்த 5 வருடமாக கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள். வேலை இல்லை, வருமானம் இல்லை என்ற நிலை பலருக்கும் இருந்திருக்கும்.
வேலை இருந்தால் நல்ல சம்பளம் இல்லை, சம்பளம் இருந்தாலும் 10 நாளைக்குதான் நிற்கிறது மீதம் மாதத்தில் 20 நாட்கள் கையில் பணம் இல்லை என்ற நிலைதான் இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லை, சொத்துக்களை இழந்தது, நிலத்தை இழந்தது என்று எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்துவிட்டது.
அதிலும் ஆரோக்கிய ரீதியாக நீங்கள் படாத கஷ்டம் இல்லை. காதலில், திருமண உறவில் கூட மிக மோசமான சூழ்நிலை உங்களுக்கு இருந்தது.
9ல் குரு கொட்டும் யோகம்: அது எல்லாம் உங்களுக்கு சரியாக போகிறது. இதுவரை 8ல் இருந்த குரு இப்படி உங்களை போட்டு தாக்கிக்கொண்டு இருந்தார். இனிமேல் அவர் உங்கள் ராசிக்கு 9ல் இருக்க போகிறார். அதோடு உங்கள் ராசியை பார்க்க போகிறார்.
இனி உங்களுக்கு பொருளாதாரம் உயரும். பணம் கொட்டும். பிஸ்னஸ் தொடங்கினால் வெற்றி நிச்சயம், வீடு, நிலம் கிடைக்கும் வாய்ப்பு வரும். பெரிய மனிதர்கள் ஆசிர்வாதம் உறவு கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.
செல்வாக்கு உயரும்: உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
இதுவரை வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த நீங்கள் இனிமேல்.. உலகிற்கே தெரியும் அளவிற்கு நீங்கள் பெரிய ஆளாக மாறும் காலம் வந்துவிட்டது.
எல்லாத்திலும் வெற்றி - பயன்படுத்திக்கொள்ளுங்கள்: நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கெட்டதெல்லாம் விலகும். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
கோபத்தை குறையுங்கள்: ஆனால் ரிஷப ராசி உங்களுக்கு எதிரி ராசி. அங்கே குரு இருப்பதால் கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
குடும்ப உறவில் சிக்கல் ஏற்படும்: திருமணம் கைகூடும். ஆனால் அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் .
பிள்ளையார்பட்டி கோவிலுக்கு செல்வது பலன்களை அதிகரிக்கும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications