Guru Peyarchi: சின்ராச இனி கையில பிடிக்க முடியாது.. கடக ராசிக்கு தூள் கிளப்பும் யோகம்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம் [Guru Peyarchi].
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடகம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் முதல் உங்கள் வாழ்க்கையே மாறும். இந்த காலகட்டத்தில் எதைச் செய்தாலும் ஒருவிதமான பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், அந்த பயம் சரிதான். உங்களுடைய கடின உழைப்பை போடுகிறீர்களோ அந்த அளவுக்கு அதன் பலனை அனுபவிப்பீர்கள். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டால் ஜூன் மாதத்திற்கு மேல் அதன் பலனை அனுபவிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
யோகம் கொட்டும்
உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். திருமண யோகம் உண்டு. தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம், புதிதாக வேலை மாறுவது போன்ற அனைத்து விதமான ஏற்றங்களும் ஏற்படும். கடகம் சந்திரனுடைய வீடாக இருந்தாலும் அங்கு புதன் சில பிரச்சனைகளைக் கொடுக்கும் வாய்ப்புள்ளது.
வாய்ப்புகள்
எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. நல்ல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஒருவிதமான மன குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். அதனால், நல்ல வாய்ப்பைக் கூட நழுவ விடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். ரிஸ்க் எடுக்காமலேயே சில நல்ல வாய்ப்புகளைத் தவர விடுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
திருஷ்டி படும்
இந்த காலகட்டத்தில் வரும் மாற்றத்தையும், சவால்களையும் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கையே மாறும் யோகம் உண்டாகும். எந்தவொரு விஷயத்தையும் துணிந்து செல்வது நல்லது. குரு நிறைய கொடுப்பதற்கு காத்திருப்பதால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் நல்ல தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
பிரம்மாண்டப்படுத்தி எதையும் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. திருஷ்டி படுவதற்கான வாய்ப்பு அதிமாக இருக்கும். அதீத நம்பிக்கை வைப்பதை தவிர்ப்பது நல்லது. கூட இருப்பவர்களாலேயே தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். குருவே எதையாவது கொடுத்தாலும் சந்திரன் அதனைத் தடுப்பதற்கான வாய்ப்புள்ளது.
கடன் தீரும்
கடனில் சிக்கியிருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்தினால் கடனே இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் கூட ஏற்படும். குரு பகவான் அள்ளிக் கொடுக்க காத்திருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. எவ்வளவு உழைப்பை போடுகிறீர்களோ அதற்கான பலனை அறுவடை செய்வீர்கள்.
திருமண யோகம்
திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை முறையை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதீத நம்பிக்கையை கைவிடுவது ஏற்றத்தைக் கொடுக்கும். உங்கள் சுற்று வட்டாரத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. திட்டைக்குடி வசிஸ்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications