Guru Peyarchi: கும்ப ராசிக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்.. பொறுமை முக்கியம்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம் [Guru Peyarchi].
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்ப ராசிக்காரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். அந்த வாய்ப்புகளை இந்த காலகட்டத்தில் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். ஏதாவது ஒரு விஷயத்துக்காக காத்திருக்கும் சூழ்நிலை இருக்கும். இந்த காலகட்டத்தில் நிறைய உழைப்பைப் போடுவது மிகவும் முக்கியம். குரு பகவானால் நிறைய நம்பிக்கையை ஏற்படும். குரு நிறைய நல்ல பலன்களை கொடுக்க காத்திருக்கிறார். ஆனால் சனி இப்போது அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.
நேர்மை முக்கியம்
நல்லது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலும் அல்லது என்ன வேலை செய்தாலும் அதனை முழுமையாக செய்வது நல்லது. எளிமையாக செய்ய வேண்டும் என்று நினைத்து சின்ன விஷயத்தை செய்வதோ, அல்லது அதனை தவிர்த்தாலோ அந்த விஷயங்களில் சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் நேர் வழியில் அதனை செய்தாலே நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தொழில்
இந்த ஆண்டில் தொழில் தொடங்கும் யோசனைகளை தள்ளிவைப்பது நல்லது. தொழிலை ஆரம்பித்திருந்தீர்கள் என்றால் அதனை விரிவுபடுத்தாமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்தை செய்தாலும் சிறிதாக முதலில் செய்வது நல்லது. திருமண யோகம், குழந்தை பாக்கியத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
கவனம்
உணவுக் கட்டுப்பாட்டில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சிகிச்சைகளை எடுத்துக் கொள்வோர் கவனமாக இருப்பது நல்லது. வீடு, நிலம் போன்ற சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு திட்டமிடும் காலகட்டமாக இருக்க வேண்டும். கையிருப்பை தாண்டி செலவுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
தடை தாமதம்
இந்த காலகட்டத்தில் எந்த விஷயங்களை ஆரம்பித்தாலம் ஏதாவதொரு தடை தாமதம் இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டப்பட்டு மேலே செல்லக்கூடிய காலகட்டமாக இருக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோர் ஒருமுறைக்கு இருமுறை முயற்சிகளைப் போட வேண்டியதிருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். கடனை அடைக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும். உங்களை சுற்றி எந்த விஷயங்கள் நடந்தாலும் அதற்கு சூழல் தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. திருவண்ணாமலையில் உள்ள சிவன் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்குமா ஜாக்பாட்?.. குருவின் அருள் கிடைக்குமா? -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம்












Click it and Unblock the Notifications