Guru Vakram: மிதுன ராசிக்கு குருவின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. கெட்டி மேளச் சத்தம் கன்ஃபார்ம்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு ராசி, லக்கினத்திலேயே குரு வக்கிரமாக வருகிறார். ராசியில் குரு வரும்போது உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கும். கழுத்து, கைகள், தொண்டை போன்ற பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். மனதளவில் மிகவும் சோர்வாக உணர்ந்திருப்பீர்கள். நிறைய பேருக்கு வேலை இழப்பு, இருதயப் பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள்.
அங்கீகாரம் கிடைக்கும்
இப்போது குரு வக்கிரமாக இருப்பதால் அற்புதமான நன்மைகளை உண்டாக்கும். புதன் வீட்டில் தற்போது குரு இருக்கிறார். குருவும், புதனும் பொதுவாக எதிரி கிரகங்கள். குரு வக்கிரமாகும்போது அந்த அளவுக்கு பாதிப்புகளை கொடுக்காது. பாசிட்டிவான விஷயங்களை மட்டும் கொடுக்கும். எந்த அங்கீகாரத்தை, மரியாதையை இழந்தீர்களோ அவை எல்லாம் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
சுபகாரியங்கள்
மாலை, மரியாதை தானாக தேடி வரும். பூஜை, புனஸ்காரங்கள், ஆன்மீகம், காதல், ஜெப தப அனுஷ்டானங்கள், மங்கள காரியங்கள், சுப காரியங்கள் எல்லாம் நடக்கும் சூப்பரான காலகட்டம். நின்று போன விஷயங்கள் எல்லாம் இனி நடக்கும். நம்பர் 12 முதல் மார்ச் 11 வரை நினைத்ததெல்லாம் நடக்கும் காலகட்டம். சுய தொழில் தொடங்கும் யோகம், நிலம் வாங்குவது, புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
திருமண யோகம்
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமண யோகம் உண்டு. குழந்தைப் பேறு பெறுவீர்கள். பிரிந்து போன தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். நண்பர்களுடன் நல்ல உறவுகள் மேம்படும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நல்ல லாபம் பெறுவீர்கள். முன்னேற்றமும், வளர்ச்சியும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உங்ளுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் காலகட்டம்.
வழிபாடு, பரிகாரம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீத நன்மைகளும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதம் முன்னேற்றம் ஏற்படும். தவழும் கிருஷ்ணரை வாங்கி தம்பதி இருக்கும் வீட்டிற்கு தானமாக கொடுப்பது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications