Guru Vakram: ரிஷபத்துக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. பேச்சில் தான் கண்டமே.. கவனம்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு குரு வக்கிரமாகும் போது அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடத்தில் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குரு வக்கிரமாக இருக்கும்போது, பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேரக்கூடிய யோகம் உண்டாகும். அடகு வைத்த நகைகளை மீட்டெடுப்பீர்கள். நல்ல விஷயத்தையே சொன்னாலும் உங்களை நம்பாதவர்கள் இனிமேல் நீங்கள் என்ன சொன்னாலும் நம்புவார்கள்.
பண வரவு
குரு வக்கிரமாக இருப்பதால் பண வரவு கூரையை பிச்சுகிட்டு கொட்டும். முகம் வசீகரமாகும். உடல்நிலை கட்டுக்கோப்பாக மாறும். குடும்ப ஸ்தானத்தில் குரு வக்கிரமாக இருப்பதால் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதால் நல்லது நடக்கும். நிறைய பேருக்கும் தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் கிடைக்கும். மன நிம்மதி, மன மகிழ்ச்சி பெறுவீர்கள். குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடக்கும். சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். தடைபட்ட சுப காரியங்கள் இனி சூப்பராக நடக்கும். கையில் வைத்திருக்கும் பணத்தை இனி முதலீடுகளைச் செய்வீர்கள். பணம் சார்ந்த கவலைப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனி பணம் கையில் விளையாடும்.
அதிர்ஷ்டம் நிச்சயம்
முகம், பற்கள், கண்கள், மூக்கில் இருந்த பிரச்சனைகள் தீரும். நல்ல மருந்து, மாத்திரைகள், மருத்துவர் கிடைக்கும். முதலீடு மட்டுமல்லாமல் நல்ல வியாபாரமும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும்போது. 2, 8 ஆம் இடம் நன்றாக இருக்கும்போது அந்த காலகட்டத்தில் காசு பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. அதனால், உங்களுக்கு காசு பண பழக்கம் அதிகரிக்கும்.
வழிபாடு, பரிகாரம்
வார்த்தைகளில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சந்தோஷம் சார்ந்த விஷயங்களில் 95 சதவீதமும், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 100 சதவீதம் ஏற்றம் பெறுவீர்கள். பசு நெய்யை அருகில் இருக்கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடுத்து வருவது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications