குரு வக்ர பெயர்ச்சி பலன்.. 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை.. எதிர்பாராத மாற்றம்!
மதுரை: நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் செப்டம்பர் 4 முதல் மேஷ ராசியில் வக்ரமடைகிறார். ராகு உடன் இணைந்துள்ள குரு பகவான் வக்ரமடைவதால் யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையும் எதிர்பாராத மாற்றமும் ஏற்படும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் வக்ரம்: குருபகவான் அதிசாரம், வக்ரம் அடையும் போது ராசிகளுக்கு சில பலன்களைத் தருவார். நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. வக்கிரம் பெற்ற கிரகங்கள் கெட்ட ஸ்தானங்களில் வக்கிரமானால் நற்பலன்களைத் தருவார்கள். சுப ஸ்தானங்களில் வக்கிரமானால் கெடுபலன்களைத் தருவார்கள்.

துலாம்: உங்கள் ராசிக்கு ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்யும் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் திருமண வாழ்க்கையில் நன்மைகள் அதிகம் நடைபெறும். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். உங்கள் ராசியை குருபகவான் பார்வையிடுவதால் தொழில் வியாபாரம் சிறப்படையும். பங்கு வர்த்தகத்தில் பலன் கிடைக்கும். பரணி, அஸ்வினி நட்சத்திரங்களில் செல்லும் குருபகவானால் உங்களின் செல்வாக்குக் கூடும். பண வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: குருபகவான் ஆறாவது வீட்டில் வக்ர கதியில் பயணம் செய்வதால் விருச்சிக ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாகன பயணங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும். சில நேரங்களில் காயங்கள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் மனதாலும் உடலாலும் சில அழுத்தங்கள் ஏற்படும். போட்டியாளர்கள், எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, 12ஆம் வீடு, 10ஆம் வீட்டின் மீது விழுவதால் சில நன்மைகள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு வரும். தொழிலில், பணி செய்யும் இடத்தில் புரமோசன் ஏற்படும்.
தனுசு: உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான் உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகத்துடனும் இருக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டை பார்க்கும் குருபகவானால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வருமானம் கூடும். ராசிக்கு ஒன்பதாம் வீட்டினை பார்க்கும் குருபகவானால் ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். அப்பாவினால் உதவி கிடைக்கும். மகளுக்கு திருமணம் கைகூடி வரும். பூர்வீக சொத்து வழக்குகள் முடிவுக்கு வரும்.
மகரம்: உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதியும் விரைய ஸ்தான அதிபதியுமான குருபகவான் இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் ராகு உடன் வக்ர நிலையில் பயணம் செய்யப்போவது சாதகமானதல்ல. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது கணவன் மனைவி இடையே சில சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். ஏழரை சனி காலமாக இருப்பதால் பணப்பற்றாக்குறை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மறைந்திருந்த நோய்கள் எட்டிப்பார்க்கும். குரு பகவானின் பார்வை அஷ்டம ஸ்தானம், தொழில் ஸ்தானம், விரைய ஸ்தானங்களின் மீது விழுகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் முயற்சி செய்யலாம்.
கும்பம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்வதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் உழைப்பு அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் சின்னச் சின்ன தடங்கல் ஏற்படும். சோம்பேறித்தனத்தை கைவிடுங்கள். குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும், பதினொன்றாம் வீட்டையும் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறும். குரு பலன் வந்திருப்பதால் தடைபட்ட திருமண சுபகாரியங்கள் நடைபெறும்.
மீனம்: உங்களுடைய ராசி நாதன் குருபகவான் ராசிக்கு இரண்டாவது வீடான குடும்ப இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்தாலும் வக்ரமடைவது நன்மை தரும் அமைப்பாகும். உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பிளவு பட்ட குடும்பம் ஒன்று சேரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், திருமண முயற்சிகள் சிலருக்கு கை கூடி வரும். வீடு கட்டும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புது வீடு கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications