Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Guru Vakram: குரு வக்கிரப் பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் 5 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா

Subscribe to Oneindia Tamil

குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு வக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு வக்கிரப் பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. ஒரு வகையான இல்யூசன் ஆகும். குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போதும், சனி வக்கிரமாகும் போதும் உச்சத்தை தொடுவார்கள்.

guru-vakra-peyarchi-palan-which-5-zodiac-signs-will-get-good-benefits-and-money-during-this-period

நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும். விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும்.

ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் சில ராசிகளுக்கு பொற்காலமாக இருக்கும். முதலாவது ஜாக்பாட் அடிக்கும் ராசி என்றால் தனுசு ராசி. ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். கும்பம், துலாம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். குரு ஜாதகத்தில் வக்கிரமாக இல்லையெனில் முடிவுகளைத் தப்பாக எடுக்கும் நிலைமை ஏற்படும்.

தனுசு

தனுசு ராசி அல்லது தனுசு லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உங்கள் ராசியதிபதி ஏழாம் இடத்தில் வக்கிரமாக உள்ளார். சுப காரிய தடைகள் நிவர்த்தியாகும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுயதொழில் செய்வதற்கான முயற்சியைத் தொடங்குவீர்கள். ஐ.டி, விற்பனை, பத்திரிகை ஊடகம் தொடர்பாக புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியை பெறும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கடந்த காலங்களில் இழந்தவற்றை படிப்படியாக மீட்பீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உங்களின் வைராக்கியத்தால் எதிர்பாராத உயரத்திற்கு செல்வீர்கள். பொருளாதாரம் மேம்படும். கடன் சுமை குறையும்.

உணர்ச்சிவசப்பட்டு யாரையும் நம்பி விட வேண்டாம். உறவுகள், நண்பர்களிடம், பணம் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கழுத்து, வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிக எச்சரிக்கை தேவை. ராமேஸ்வரம் ராமநாதர், சேது மாதவன் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசி அல்லது கும்ப லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் குரு வக்கிரமாக இருக்கிறார். நல்ல மணப் பொருத்தங்கள் ஏற்படும். கலப்புத் திருமணம் ஏற்படும். ரெஜிஸ்டர் திருமணம் செய்யும் நிலை ஏற்படும். பூர்வீக சொத்துகள், முன்னோர் சொத்துகள் கிடைக்கும். புதிதாக வீடு வாங்குவீர்கள். நிலம் வாங்குவீர்கள். சொத்துகளை விற்று பணம் வரும். எல்லா கோணங்களிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

எதை செய்தாலும் தெய்வத்துடைய அனுக்கிரகத்துடன் செய்வது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். 5 வேத விற்பன்னர்களுக்கு சாப்பாடு போடுவது நல்லது. அல்லது அன்னாதானத் திட்டத்துக்கு பணம் செலுத்தி சாப்பாடு போடுவது நல்லது. கல்விக்கு உதவி செய்வது நன்மையைத் தரும். ஆரோக்கியத்தில் இருக்கும் குறைபாடுகள் நீங்கும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும். நிறைய ஏற்றங்கள் ஏற்படும். மனது மாறும். மனதில் மகிழ்ச்சி பெருகும். எதுவுமே நடக்காத என்கிற நிலைமை மாறி நன்மைகள் நடக்கும். உங்கள் வாழ்க்கை நான்கு, ஐந்து மாதங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சாரங்கபாணி வழிபாடு அமோகமான மாற்றத்தைக் கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு டாப் கிளாஸாக இருக்கும். துலாம் ராசி என்பது சுக்கிரனின் ராசி. குரு என்பது தேவாதிபதி. துலாம் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து நிறைய நல்ல விஷயங்களை செய்து கொடுத்திருப்பார். வீடு, திருமணம், வண்டி, வாகனம், குழந்தை பாக்கியம் என அனைத்து பாக்கியங்களையும் கொடுத்திருப்பார். ஆனால் தற்போது குரு வக்கிரமாகிறார்.

குரு வக்கிரமாகும்போது உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்து சேரும். வெளிநாட்டுக்குச் சென்று பணம் ஈட்டிக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்படும். திருமணமாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். லாபம் அதிகரிக்கும். பிரிந்து போன அப்பா மகன் மீண்டும் சேரும் யோகம் உண்டாகும். அம்மா, அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

வெளியூர் செல்லும் பாக்கியம், அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு பேராசிரியராகும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றிகளைக் குவிக்கும் யோகம் உண்டாகும். வீடு, பணம், வண்டி வாகன யோகம் ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும் அற்புதமான காலகட்டம். சேமிப்புகளை செய்யத் தொடங்குவீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குரு வக்கிரமாக இருக்கிறார். எந்த கோணத்தில் நீங்கள் நன்மைகள் நடக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த கோணத்தில் கண்டிப்பாக நன்மைகள் கிடைக்கும். திருமணமாகாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சகோதரர்கள், நண்பர்களின் ரெஃபரன்ஸ் மூலமாக நல்ல வரன்கள் அமையும்.

வராத பதவி உயர்வுகள், நட்பு மீண்டும் வந்து சேரும். அரசியல் பதவிகள் தேடி வரும். நாடாளக் கூடிய, அரசாளக் கூடிய, மாகாணத்தை ஆளக் கூடிய, உங்கள் துறை, பள்ளிகளில் பெரிய பதவி உயர்வு கிடைக்கும். முனைவர் பட்டம் பெறும் யோகம் உண்டாகும். அடுத்த கட்டத்துக்குச் செல்லும் யோகம் ஏற்படும். நிறைய பேருக்கு பெரிய பதவிகள், பெரிய பரிசுகள் வந்து சேரும். உங்கள் டார்கெட்டுகளை சாதித்து முடிக்கும் பாக்கியம் உண்டாகும்.

லட்சியத்தில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பல நட்புகள் உங்களுக்கு சாதகமாக மாறும். அண்ணன், தம்பிகள் மீண்டும் ஒன்று சேருவீர்கள். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். வீட்டில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது நல்லது. னந்தோறும் கோயிலுக்குச் செல்வது, விபூதி, சந்தனம் வைத்துக் கொள்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு எந்த பெயர் கெட்டதோ அந்த பெயர் நல்லதாக மாறும். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் மீண்டும் சேர்வார்கள். கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகள், இதயம், கால் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பிரிந்து சென்ற அப்பா, மகன்கள் மீண்டு வருவார்கள். பழைய கணக்கை கச்சிதமாக முடிக்கும் காலகட்டமாக இருக்கும்.

நீண்டநாட்களாக திருமணம் ஆகாத நபர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். இரண்டாம் குழந்தை பிறப்பதற்கான யோகம் ஏற்படும். எதிர்பார்க்காத யோகம் கிடைக்கும். எதிர்பாராத பதவிகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். தொழில் 10 மடங்கு உயரக்கூடிய பாக்கியம் உண்டாகும். புது முயற்சிகள் வெற்றி அடையும். புதிய தொழில், வியாபாரம் வெற்றி அடையும். நம்பிக்கை பெரிய அளவுக்கு ஏற்படும்.

ஒரு விஷயத்தை எடுத்து செய்தால் கண்டிப்பாக நடக்கும் என்பது போன்ற சூழல் ஏற்படும். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். உங்களை முன்னிறுத்தி பல விஷயங்களை சாதிக்கும் நிலை ஏற்படும். நீங்கள் தப்பாகவே பேசினாலும், சரியாக எடுத்துக் கொள்ளும் சூழல் ஏற்படும். நிலைமைகள், உங்களுக்கு மதிப்புகள் மாறும். மிதுனம், துலாம், கும்ப ராசிகளுக்கு அதிகளவிலான ஆட்கள் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். நட்பினால் நல்ல சந்தோஷங்கள் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+