சனி பெயர்ச்சி 2025: பாதிப்படையும் ராசிகள் தப்பிப்பது எப்படி? சனி பகவான் மந்திரம், வழிபாட்டு முறைகள்
சென்னை: சனிக்கிழமைகள் இந்து மதத்தில் சனி பகவானின் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் பெற்ற நாட்களாகும். நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனி பகவானின் ஆசீர்வாதமும் சாபமும் ஒருவரின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதன் மூலம் அவரது அருளைப் பெறலாம்.
சனி பகவான் 2025-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இந்த காலகட்டத்தில், அஷ்டமத்து சனி, ஏழரை சனி, கண்ட சனி, விரைய சனி என பல ராசிகளுக்கு பல்வேறு பலன்கள் உருவாகும். எனவே சனி பகவான் கொடுக்கும் சிரமங்களில் இருந்துவிடுபட அவரை எப்படி வழிபடுவது என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இதோ அதற்கான பரிகாரங்கள் உங்களுக்காக.

சனி பகவான் வழிபாட்டு முறைகள்:
- குளித்து புதிய ஆடைகளை அணிந்து தங்களைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
- சனி பகவானின் அருளைப் பெற அவருக்கு உரிய மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.
- மரியாதையின் அடையாளமாக எண்ணெய் விளக்குகள் மற்றும் கற்பூர தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.
- சிவப்பு நிறத்தைத் தவிர்த்து, மற்ற மலர்களை சனி பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
- பழங்கள், இனிப்புகள் போன்ற படையல்களுடன் வழிபாடு நிறைவு பெற வேண்டும்.
சனி பகவானுக்கு உரிய மந்திரங்கள்: சனீஸ்வர காயத்ரி
ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
சனி பகவானுக்கு உரிய ஸ்லோகம்
நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
இதன் பொருள்:
கருணை உள்ளமும், வரங்களை வாரி வழங்கும் வள்ளலுமான சனி பகவானை தியானிப்பதால் பல்வேறு நன்மைகளை அடையலாம். ஆயுள் விருத்தி, விவசாய மேன்மை, எருமை உள்ளிட்ட பயனுள்ள கால்நடை விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோகத்தில் மன அமைதி, வேலைக்காரர்களால் நன்மை, நோய்கள் நீங்கும், கஷ்டங்கள் குறையும். இதுதான் பொருளாகும்.
இதேபோல, ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
இது சனி ஸ்தோத்திரமாகும்.
இந்த வழிபாட்டு முறைகளையும், மந்திரங்களை ஜபிப்பதன் மூலம், பக்தர்கள் சனி பகவானின் அருளைப் பெற்று, அவரது தீர்ப்பின் எதிர்மறையான விளைவுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications