Magaram: ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. புதன், சுக்கிரன் அருளால் டாப் கியரில் இனி வாழ்க்கை மாறும்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஆரம்பத்தில் 6, 12 ஆம் இடத்தில் கிரகங்கள் தொடர்பு கொண்டிருக்கின்றன. சுக்கிரன், புதன், குரு ஆகியோர் 6 ஆம் இடத்தில் தொடர்பு கொண்டிருக்கின்றனர். மாதத்தின் பிற்பகுதியில் ராசியிலேயே சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் அமருவார்கள். ராசியில் செவ்வாய் அமருவதால் கோபம் அதிகமாக வரும். சுறுசுறுப்பு உங்களுக்கு அதிகமாகும்.
பணவரவு
12 ஆம் இடம் ஆரம்பத்தில் நல்ல விதமாக கைகொடுக்கும். முதல் 15 நாட்கள் நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். வெளியிடங்களில் இருந்து காசு, பணம் வந்து சேரும். தடைகள் விலகக்கூடிய நிலைமை ஏற்படும். கட்டடம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள், ஹோட்டல், ரிசார்ட், ஃபாஸ்ட் புட் கடை வைத்திருப்பவர்கள், திருமணத் தகவல் தொடர்பாளர்கள், திருமண கண்டிராக்டர்கள், ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்பவர்களுக்கு இந்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல வருமானங்கள் வரும்.
யோகம்
ராசியில் 4 கிரகங்கள் அமருவதால், செவ்வாய் சுபத்துவம் அடைவதால் சுறுசுறுப்பு அடைவீர்கள். கடந்த சில மாதங்களாக பல்வேறு பாதிப்புகளை, சிக்கல்களைச் சந்தித்து வந்தவர்களுக்கு எல்லாம் இந்த ஜனவரி மாதம் சூப்பர் வேகத்தில் இருக்கும். பெரிய அளவில் சோதனைகள் ஏற்படாது. கடந்த காலத்தில் எந்தெந்த இடங்களில் தப்பு செய்தோம், ஏனென்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு படிப்படியாக மீண்டு வரும் யோகம் சூழல் ஏற்படும்.
புதன் சுக்கிரன் பார்வை
7 ஆம் பாவத்தில் மாதத்தின் பிற்பகுதியில் புதனும், சுக்கிரனும் பார்ப்பதால் கடந்த காலத்தில் திருமணமாகாதவர்கள், ஆணாலும், பெண்ணாலும் சங்கடத்தை அனுபவித்தவர்கள், காதல் தோல்வி அடைந்தவர்கள் எல்லோருக்கும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு புதிய உறவு, புதிய காதல், புதிய திருமணம் போன்ற அமைப்புகள் ஏற்படுவதற்கான யோகமாக இந்த மாதம் அமையும்.
நிம்மதி, சந்தோஷம்
குடும்பத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் நிம்மதி, சந்தோஷம் கொடுக்கக்கூடிய அமைப்பு ஆரம்பிக்கும். இதுவரை உங்கள் பேச்சைக் கேட்காதவர்கள் எல்லாம் இனிமேல் உங்கள் பேச்சைக் கேட்க ஆரம்பிப்பார்கள். பழையபடி திரும்பி வரும் சூழல் ஏற்படும். உங்கள் கருத்தைக் கேட்கக்கூடிய சூழல் ஏற்படும். நெகட்டிவ் விஷயங்கள் எல்லாம் நீங்கும்.
முன்னேற்றம்
கசப்பாக இருந்த கணவன், மனைவி உறவெல்லாம் இனி மாறி திருப்தி அளிக்கக்கூடியதாக மாறக்கூடிய அமைப்பு ஏற்படும். சொல் பலிக்காமல் இருந்தவர்கள், வாக்குத் தவறி நடந்தவர்கள் எல்லாம் பழையபடி உங்கள் மரியாதை வரக்கூடிய முன்னேற்றமான மாதமாக உங்களுக்கு இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.












Click it and Unblock the Notifications