Meenam: சனி பகவானின் அருளால் மீனம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. வருமானம் கொட்டும்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் மீனம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு ராசிக்கு லாபாதிபதியான சனி பகவானின் ஆசிர்வாதத்தில் ஜனவரி மாதம் தொடங்கியுள்ளது. நல்ல உத்தியோக மேன்மை கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ராசிக்கு அதிபதி குரு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஏற்படும். வீடு, நிலம், இடம் வாங்கும் எண்ணத்தைக் கொடுப்பார்.
ஆரோக்கியம்
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. கழுத்து, குரல்வளையில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் பகவான் 10 ஆம் இடத்தில் அமர்ந்து நல்ல வருமானத்தைக் கொடுப்பார். சொத்துகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய வியாபாரம், தொழில் தொடங்கும் வாய்ப்புள்ளது.
வருமானம் பெருகும்
பேச்சின் மூலமான தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். பேச்சில் அதிகாரம் பிறக்கும். சுக்கிரன் 10 ஆம் இடத்தில் இருப்பது மிகவும் விசேஷமாகும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 3 இல் சந்திரன் இருப்பதால் பிள்ளைகளுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படும். கம்யூனிகேஷன் சிறப்பாக இருக்கும். அக்கம்பக்கத்தினரால், சக ஊழியர்களால் சிறு சிறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
சொத்துகள் வாங்குவீர்
சொந்தமாக சொத்துகள், காலி மனைகள் வாங்கும் யோகம் உண்டு. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி ஏற்படும். புதிய பதவிகள் கிடைக்கும். உயர்கல்வி சூப்பராக இருக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியன் 10 ஆம் இடத்தில் இருப்பதால் அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திருமண யோகம்
எலும்புகள் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மருத்துவப் பணியாளர்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும். புதன் 10 இல் இருப்பதால் திருமணம் கைகூடி வரும். வேலை மாற்றம் கிடைக்கும். பாக்கியாதிபதி செவ்வாய் 10 இல் அமர்ந்திருப்பதால் மிகச்சிறந்த யோகங்கள் கிடைக்கும். நல்ல சொத்து சேரக்கூடிய யோகம் உண்டாகும்.
உயர்பதவி
உயர்பதவிகள் கிடைக்கும். சனி பகவான் ராசியில் அமர்ந்திருப்பதால் அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். சனி பகவான் ராசியில் இருப்பதால் சில மாற்றங்கள் முன்னேற்றத்தை தரும். இடமாற்றத்தால் நன்மைகள் கிடைக்கும். படிப்பு, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராகவேந்திரர் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications