Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூலை மாத ராசி பலன் 2021: கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜயோகம் தேடி வரும்

ஜூலை மாதத்தில் கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும். அற்புதங்கள் நிகழ்ந்தாலும் பொறுமையும் வேலையில் கவனமும் தேவைப்படும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்பம் மற்றும் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டமும் யோகமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. சோம்பேறித்தனம் நீங்கி உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜயோகம் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு சுப காரிய முயற்சிகள் கை கூடி வரும் மாதமாக அமைந்துள்ளது.

ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் கடக ராசியிலும் சிம்மம், கன்னி ராசியிலும் பயணம் செய்வார். புதன் ரிஷபத்தில் மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார். செவ்வாய் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து ஜூலை மாதத்தில் கும்பம் மற்றும் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

திடீர் ராஜயோகம்

திடீர் ராஜயோகம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே ஜூலை மாதத்தில் சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்து மற்றும் ஆறாம் வீடுகளில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற புதனுடன் சூரியன் பயணிக்கும் நேரத்தில் திடீர் ராஜயோகம் கை கூடி வரும். மாத பிற்பகுதியில் சூரியன் சனி பார்வையால் திடீர் கோபம் விரக்தி வரும் கட்டுப்படுத்துங்கள் முடிந்த வரைக்கும் மவுன விரதம் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

செலவுகள் தேடி வரும்

செலவுகள் தேடி வரும்

குரு ஜென்ம ராசியில் இருப்பதால் பொருளாதார வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். வேலையில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. வருமானம் வருவதற்கு ஏற்ப திடீர் சுப செலவுகள் வரும். விரைய சனியால் நிறைய செலவுகள் வரும். அதே நேரத்தில் திடீர் பண வரவு வரும். இந்த மாதத்தில் திருமண சுப காரிய முயற்சி பேச்சுவார்த்தைகளைத் தள்ளி வைப்பது நல்லது.

சுறுசுறுப்பு கூடும்

சுறுசுறுப்பு கூடும்


செவ்வாய் சுக்கிரன் மாத பிற்பகுதியில் இடமாற்றம் ஏற்படுவதால் வேலையில் இருந்த மந்தநிலை மாறும். உடலில் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். புதன் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வண்டி வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். நீண்ட நாட்களாக படிக்க நினைத்த கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். காதல் விசயங்களில் விட்டுக்கொடுத்து செல்லவும்.

சுப செலவுகள்

சுப செலவுகள்


குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, புதன், நான்கு மற்றும் ஐந்தாம் வீடுகளில் சூரியன் பயணம் செய்கிறார். ஐந்தாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என மாத துவக்கத்தில் கிரகங்கள் பயணம் செய்கின்றன. ராசி நாதன் குரு விரையமாக இருப்பதால் இந்த மாதம் சுப விரைய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் விசயமாக சுப விரைய செலவுகள் வரலாம்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

வேலையில் புதிய முயற்சிகள் வேண்டாம். இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் மூலம் வருமானம் வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். சொத்து வீடு வாங்கலாம். பரம்பரை சொத்தில் இருந்து பாகப்பிரிவினை செய்யலாம். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன வாயுத் தொந்தரவு ஏற்படும். காதில் பிரச்சினை வரலாம் கவனம்.

அதிர்ஷ்டம் நிறைந்த மாதம்

அதிர்ஷ்டம் நிறைந்த மாதம்

மாத பிற்பகுதியில் சூரியன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக மாத முற்பகுதியில் பேசலாம். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். ஜூலை மாதத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்து மாட்டிக்கொள்ள வேண்டாம். மொத்தத்தில் உங்களுக்கு நிறைய நன்மைகளும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த மாதமாக ஜூலை மாதம் அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+