For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூலை மாத ராசி பலன் 2021: மேஷ ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும் அனுபவிக்க தயாராகுங்கள்

ஜூலை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கை கூடி வரும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். ஜூலை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு என்று பாடலே உள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் குதூகலமான மாதமாக அமையப்போகிறது. திருமண யோகம் கை கூடி வரும். புத்திரர்களுக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் மாதமாக அதிர்ஷ்டம் தேடி வரும் மாதமாக ஜூலை மாதம் அமைந்துள்ளது.

ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் கடக ராசியிலும் சிம்மம், கன்னி ராசியிலும் பயணம் செய்வார். புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார். செவ்வாய் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஆனி மாத ராசி பலன்2021: ஆனி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதம் நிகழும் தெரியுமா ஆனி மாத ராசி பலன்2021: ஆனி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதம் நிகழும் தெரியுமா

பண வரவு

பண வரவு

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. உங்களுக்கு இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் முதல் பாதியில் 3ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். ராசிநாதன் செவ்வாய் நீச்சமடைந்து பயணம் செய்கிறார். 10 ஆம் தேதி மனதில் தெளிவு பிறக்கும். பண பிரச்சினைகள் நீங்கும். புதன் 7ஆம் தேதி 3ஆம் வீட்டிற்கும் 27ஆம் தேதி நான்காம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். உங்களுடைய வாக்கில் தெளிவு பிறக்கும்.

கணவன் மனைவி

கணவன் மனைவி

இந்த மாதத்தில் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். கணவன் மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை கொடுக்கும் பரிசு உங்களை திக்குமுக்காடச் செய்யும். சண்டை சச்சரவுகள் நீங்கும். காதல் வாழ்க்கை குதூகலத்தை தரப்போகிறது.

வீண் விவாதம்

வீண் விவாதம்

16ஆம் தேதி சூரியன் நான்காம் வீட்டிற்கு போகிறார். சூரியன் பார்வை பத்தாம் வீட்டில் விழும் போது வேலையில் புரமோசன் கிடைக்கும். செவ்வாய் சுக்கிரன் ஒன்றாக இணைந்து நான்காம் வீட்டில் இணைந்திருப்பதால் தேவையில்லாத விவாதத்தை தவிர்க்கவும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து சென்றால் சிறப்பு.

முயற்சிகளுக்கு வெற்றி

முயற்சிகளுக்கு வெற்றி

மாத பிற்பகுதியில் 17ஆம் தேதி சுக்கிரன் ஐந்தாம் வீட்டிற்கு நகர்வது சிறப்பு. மனதிற்கு பிடித்த நல்ல மாற்றம் ஏற்படும். காதல் கை கூடி வரும். சனியும் குருவும் சாதகமான இடங்களில் பயணம் செய்கின்றனர். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். புத்திர பாக்கியம் கை கூடி வரும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் சுபமாக கைகூடி வரும்.

சுப விரையங்கள்

சுப விரையங்கள்

மாணவர்களின் உயர்கல்வி யோகம் கைகூடி வரும். நல்ல கல்லூரியில் மேல்நிலை கல்வி படிக்க நல்ல நேரம். ராகு கேதுவின் சஞ்சாரம் குடும்பத்தில் சில குழப்பத்தை தருவார். திடீர் சுப விரையங்கள் வரும். ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் வரலாம். நோய் தொற்று பரவும் காலமாக இருப்பதால் பயணங்களில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். தொழில் முதலீடுகளில் கவனம் தேவை.

English summary
July Month Rasi Palan 2021 tamil : Check out Mesham July Matha Rasi Palan prediction from July 1st 2021 to July 31st 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X